"தோனிக்காக நேத்து கண் முழிச்சு இருந்து கிரிக்கெட் பாத்தேன்.." பிரபல எம்.பி போட்ட ட்வீட்.. கடைசி'ல ஒன்னு சொன்னாரு பாருங்க.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பல நாட்களுக்கு பிறகு, ஐபிஎல் தொடரில், தோனி பினிஷ் செய்து வைத்த சம்பவம்,  கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.

"தோனிக்காக நேத்து கண் முழிச்சு இருந்து கிரிக்கெட் பாத்தேன்.." பிரபல எம்.பி போட்ட ட்வீட்.. கடைசி'ல ஒன்னு சொன்னாரு பாருங்க.."

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாற்றம் கண்டது.

குறைந்த ரன்கள் என்றாலும், சிஎஸ்கே அணி நிதானமாக ஆடி ரன் சேர்த்ததால், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பது போலவே தோன்றியது.

பேட்டிங்கில் ஃபுல் 'Form'

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கடைசி நான்கு பந்தில் ஒரு சிக்ஸர் மற்றும் இரு பவுண்டரிகள் அடித்து, போட்டியை சென்னை பக்கம் திருப்பி இருந்தார் தோனி. ஐபிஎல் தொடரில் தோனியின் பேட்டிங், அதிக விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், நடப்பு சீசனில் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் தோனி.

அது போல, மும்பை அணிக்கு எதிரான போட்டியில், Vintage பினிஷர் ஆகவும் தோனி மாறியுள்ள சம்பவம், ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தி இருந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் என்பதைத் தாண்டி, பல கிரிக்கெட் பிரபலங்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு பிரமித்து போயிருந்தனர். அது மட்டுமில்லாமல், ஆனந்த மஹிந்திரா உள்ளிட்ட மற்ற துறைகளை சேர்ந்த பிரபலங்களும் தோனியின் ஆட்டத்தை கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போய் ட்வீட் செய்திருந்தனர்.

பாராட்டிய அரசியல் தலைவர்

அந்த வகையில், பிரபல அரசியல் தலைவர் ஒருவர், தோனி பற்றி செய்துள்ள ட்வீட்டும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி, தோனியின் பேட்டிங் குறித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தூங்காம இருந்து பாத்தேன்..

அதில், "நேற்று இரவு எனது ஃபேவரைட் கிரிக்கெட் வீரர் தோனி தன்னுடைய மேஜிக்கை செய்வாரா என தூங்காமல் இருந்து கண்விழித்து பார்த்தேன். பள்ளியில் நான் கிரிக்கெட் வீரராக இருந்த நாட்கள் உட்பட எனது ஒட்டுமொத்த வாழ்நாளில், நேற்றிரவு பார்த்தது போன்று ஒரு சூப்பர் மேஜிக்கை நான் பார்த்ததே இல்லை. தோனியை மிஞ்சினார் தோனி" என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தொடர்பாக பல கருத்துக்களை நேரடியாக தெரிவிக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தோனியின் இன்னிங்ஸ் பற்றி ரசிகராக மாறி போட்டுள்ள ட்வீட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/

MSDHONI, CHENNAI-SUPER-KINGS, SUBRAMANIAN SWAMY, MSD, CSK, IPL 2022, சுப்பிரமணியன் சுவாமி, தோனி

மற்ற செய்திகள்