'மூளையில் அதிர்ச்சியா?' .. 'கிரிக்கெட் வீரரின் மண்டையை பதம் பார்த்த'.. 'பயிற்சி உதவியாளரின் த்ரோ'.. அடுத்த போட்டியில் ஆட மாட்டார் என தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடவில்லை. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 

'மூளையில் அதிர்ச்சியா?' .. 'கிரிக்கெட் வீரரின் மண்டையை பதம் பார்த்த'.. 'பயிற்சி உதவியாளரின் த்ரோ'.. அடுத்த போட்டியில் ஆட மாட்டார் என தகவல்!

இதேபோல் 2வது போட்டியிலும் அவர் ஆட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இதற்குக் காரணம் வலைப்பயிற்சியில் பயிற்சி உதவியாளர் செய்த த்ரோதான். 

இயன் மோர்கனின் கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 14 போட்டிகளில் 11 போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. ஆனால் வரும் ஞாயிறு  அன்று நடக்கவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், 2015-க்குப் பிறகு இருதரப்பு தொடரை இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றிகொள்ளும்.

இந்நிலையில் வலைப்பயிற்சியில் பயிற்சி உதவியாளர் செய்த த்ரோ ஸ்மித்தின் மண்டையைப் பதம் பார்த்ததால், அவரது மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் முதலாவது கன்கஷன் டெஸ்ட் முடிந்துள்ளது, எனினும் தொடர்ந்து 2வது கன்கஷன் டெஸ்ட் எடுத்த பிறகே அவர் ஆடுவாரா இல்லை மாட்டாரா என்பது உறுதியாகும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஜோப்ரா ஆர்ச்சரின் அதிவேக எகிறு பந்தால், மண்டையில் அடி வாங்கிய ஸ்மித், டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆட முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்