'எப்பவும் ஒரே மாதிரி ஆடிக்கிட்டு இருப்பேன்னு நெனைச்சீங்களா?.. ஸ்மித்டா!! இப்படியும் ஆடுவேண்டா!!' .. வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் நியூசவுத்வேல்ஸ் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் தனது 42வது முதல்தர கிரிக்கெட் சதத்தை அடித்துள்ளார்.
அதுவும் இந்த சதத்தை 290 பந்துகளில் அடித்திருப்பதுதான் கிரிக்கெட் உலகில் பெரிதும் பேசப்பட்டு வரும் அவரது மிக மெதுவான சதமாகும். முன்னதாக டி20-யில் பாகிஸ்தானுக்கு எதிராக 51 பந்துகளில் 80 ரன்கள் விளாசிய ஸ்மித், தற்போது சிட்னி மைதானத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாண்ட ஷெஃபீல்ட் ஷீடல்ட் ஆட்டத்தில்தான் 290 பந்துகளில் 100 ரன்களை எட்டியுள்ளார். இவரது முந்தைய மெதுவான சதம், 2017-18 ஆஷஸ் தொடரில் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 261 பந்துகளில் எடுத்ததுதான்.
இதுபற்றி பேசிய ஸ்மித், தனக்கு பிடித்ததை விடவும் மந்தமான, மென்மையான பிட்சில், மிகவும் மந்தமாக ஆடியதாகவும், அதே சமயம் இம்முறை சிறப்பாகவே ஆடியதாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்முறை ஸ்லிப் பீல்டர்களே இல்லை, பீல்டர்களும் சுற்றி நின்றிருந்ததாகவும், பொறுமையாக பந்துக்குரிய மரியாதையை அளித்து ஆடியதாகவும் அதே சமயம் தன்னை அவர்கள் சுதந்திரமாக ரன்கள் அடிக்க விடவில்லை என்றும் பேசியுள்ளார்.
NEVER tell Steve Smith he has to stop batting!
A bizarre dismissal brings the right-hander's 42nd first-class century to an end #SheffieldShield pic.twitter.com/KNEDpjtiFp
— cricket.com.au (@cricketcomau) November 12, 2019
103 ரன்களில் ஆட்டமிழந்த ஸ்மித், இந்த ரன்களை உதிரி உதிரியாகவே சேர்த்ததாக புன்னகைத்துக் கூறியுள்ளார்.