என்னங்க 'இப்படி' போட்டு பொளக்குறீங்க...? எப்படி உங்கள 'சமாளிக்க' போறோம்னு சத்தியமா தெரியல...! - 'மிரண்டு' போன ஆஸ்திரேலிய வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி டி-20 உலகக்கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணி வீரர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி டி-20 உலக கோப்பைக்கு சென்றுள்ளது. தற்போது 'க்ரூப் ஸ்டேஜ்' போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சுற்றான சூப்பர்-12 சுற்று அடுத்த இரு தினங்களில் தொடங்க உள்ளது.
இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், பரபரப்பையும் அளிக்கும் இந்த தொடரில் எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என இப்போதிருந்தே கிரிக்கெட் ஆர்வலர்களும், முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இந்திய கிரிக்கெட் அணியை குறித்து கூறியுள்ளார்.
அதில், 'இந்த உலக கோப்பை தொடரில் மிகவும் அபாயகரமான அணியாக இந்தியா திகழ்கிறது. டி-20 உலக கோப்பையை வெல்வதற்கான அனைத்து விஷயங்களும் இந்திய அணியிடம் உள்ளது.
இந்திய வீரர்கள் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 மாதமாக அமீரகத்தில் விளையாடி வருவதால் இங்கு இருக்கும் மைதானத்தோடும், அமீரக கண்டிஷனுக்கும் நன்றாக பழக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது' என ஆஸ்திரேலியவீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்