"எதாவது காரணம் சொல்லி 'ஐபிஎல்' ஆடாம எஸ்கேப் ஆயிடுவாரு?..." 'கிளார்க்' சொன்ன 'பகீர்' கருத்து... "என்ன இவரு, இப்டி போட்டு ஒடச்சிட்டாரு!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் சிறப்பாக முடிவு பெற்றுள்ளதையடுத்து, ஐபிஎல் தொடரை நோக்கி, ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

"எதாவது காரணம் சொல்லி 'ஐபிஎல்' ஆடாம எஸ்கேப் ஆயிடுவாரு?..." 'கிளார்க்' சொன்ன 'பகீர்' கருத்து... "என்ன இவரு, இப்டி போட்டு ஒடச்சிட்டாரு!!"

இந்த ஏலத்தில், பேட்ஸ்மேன்களை விட, ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் ஆகியோர் தான் அதிக தொகைக்கு ஏலம் போயினர். அதிலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் எடுக்க, அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதால், அதிக தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2.2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி, அவரை ஏலத்தில் வாங்கியது.

ஐபிஎல் போட்டிகளில் சிறந்த பேட்டிங் ரெக்கார்ட் வைத்துள்ள ஸ்மித், எதிர்பார்த்ததை விட குறைவான தொகைக்கு ஏலம் போனதால் அவர் ஐபிஎல் தொடரை புறக்கணிக்கவே அதிகம் முயற்சி செய்வார் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

'நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித், மிகக் குறைவான தொகைக்கு ஏலம் போயுள்ளார். அது எனக்கு சற்று வியப்பாகவே உள்ளது. 4 லட்சம் டாலர்களுக்கு குறைவாக அவரை விலைக்கு வாங்கினாலும் அது நல்ல தொகை தான்.

ஆனால், கடந்த சீசனில் ஸ்மித் வாங்கிய தொகையை விட இது குறைவாகும். அது மட்டுமில்லாமல், கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித் இருந்தார். ஆனால், இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஒரு வீரராக அவர் விளையாடவுள்ளார். ஐபிஎல் தொடருக்காக, அவர் இந்தியா கிளம்புவதற்கு முன் ஏதேனும் காயம் ஏற்பட்டால் கூட வியப்படைய தேவையில்லை. ஐபிஎல் தொடர், 8 வாரங்கள் நடைபெறும் போட்டித் தொடராகும். இதற்கு முன்பாக, தனிமைப்படுத்தும் காலங்கள் என எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 11 வாரங்கள் இந்தியாவில் தங்க வேண்டியிருக்கும்.

ஆனால், இது போன்ற குறைந்த தொகைக்கு ஸ்மித் ஏலம் போயுள்ளதால், அவரது குடும்பத்தையும், நண்பர்களையும் விட்டு 11 வாரங்கள் ஐபிஎல் தொடரில் பங்கு கொள்ள மாட்டார். ஏதேனும் பொய்யான காரணங்களை சொல்லி குடும்பத்தினருடன் நேரத்தை கழிப்பார்' என கிளார்க் கூறியுள்ளார். முன்னாள் வீரர் ஒருவர், இப்படி தெரிவித்துள்ள கருத்தின் மூலம், ஸ்மித் தான் ஏலம் போன தொகையால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்