"ஏற்கனவே 'மேட்ச்' தோத்த 'கடுப்பு'ல இருக்கோம்... இதுல 'இது' வேறயா??.." என்ன 'கொடும' சார் இது??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிக எளிதில் வீழ்த்தி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இரண்டு போட்டிகளில் மிக அதிரடியாக ஆடி வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் தகுதி பெறும் என இந்த ஐபிஎல் தொடக்கத்தில் அனைவரும் கருதிய நிலையில், தற்போது அந்த அணியின் ஆட்டம் மிகப் பெரிதாக எடுபடவில்லை.
இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், மிக மெதுவாக பந்து வீசியதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 12 லட்ச ரூபாய் அபாரதம் விதிக்கபட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பாக, டெல்லி மற்றும் பெங்களூர் அணி கேப்டன்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கும் 12 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஏற்கனவே, ராஜஸ்தான் அணி தொடர் தோல்விகளால் தவித்து வரும் நிலையில், மெதுவாக பந்து வீசியதாக அபராதம் விதிக்கப்பட்டது கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை இன்னும் விரக்திக்குள் ஆக்கியுள்ளது.
மற்ற செய்திகள்