IPL 2023 : "இந்த தடவ நான் வரேன்". ஏலத்தில் போகாத போதும் ஸ்டீவ் ஸ்மித் சொன்ன விஷயம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

16 ஆவது ஐபிஎல் சீசன், வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது. மேலும் இதன் அறிமுக போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள், அகமதாபாத் மைதானத்தில் வைத்து மோதுகின்றன.

IPL 2023 : "இந்த தடவ நான் வரேன்". ஏலத்தில் போகாத போதும் ஸ்டீவ் ஸ்மித் சொன்ன விஷயம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்?

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "என்னா மனுஷன்யா".. பவுண்டரி லைன் அருகே நின்ன குழந்தை.. ரன் போனாலும் பரவாயில்லன்னு பிரபல வீரர் செஞ்ச விஷயம்!!.. வீடியோ!

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதே போல, அனைத்து போட்டிகளும் இந்தியாவில் உள்ள அனைத்து மைதானங்களிலும் நடைபெற உள்ளது ரசிகர்களை இன்னும் குதூகலப்படுத்தி உள்ளது.

அது மட்டுமில்லாமல், ஐபிஎல் நெருங்கி வரும் சூழலில் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் குறித்து பல்வேறு கருத்துக்களும் இணையத்தில் எப்போதும் நிரம்பி கிடக்கின்றது. அப்படி இருக்கையில், இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் என்ட்ரி கொடுக்க உள்ள விஷயமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Steve Smith about return to ipl 2023 with a twist

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ ஸ்மித் கடந்த டிசம்பர் மாதம் நடந்த மினி ஏலத்தில் இடம்பெற்றிருந்த போதும் அவரை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அப்படி இருக்கையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்துள்ளார்.

அதில் பேசும் ஸ்மித், "நான் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைகிறேன். இந்தியாவில் அசாதாரணமான துடிப்புமிக்க ஒரு அணியில் இணைகிறேன்" என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை ஐந்து அணிகளுக்கு மேல் இணைந்து ஐபிஎல் தொடரில் ஆடியுள்ள ஸ்டீவ் ஸ்மித், இந்த முறை ஏலத்தில் போகாத போதும் அவர் தற்போது ஐபிஎல் அணியில் இணைந்துள்ளதாக ட்விஸ்ட்டுடன் சேர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Steve Smith about return to ipl 2023 with a twist

Images are subject to © copyright to their respective owners.

ஆனால், அதே வேளையில், ஐபிஎல் தொடரில் உள்ள பத்து அணிகளில் ஒன்றாக அது இருக்காது என்றும், வர்ணனைக் குழுவில் இடம்பெற்றுள்ளதை தான் ஸ்மித் அப்படி அணி என குறிப்பிடுவதாகவும் ரசிகர்கள் மறுபக்கம் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ஸ்மித் அணியில் இணைகிறாரா அல்லது வர்ணனை குழுவில் இணைகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read | மெர்சிடிஸ் வாங்க பிளான் போட்ட குத்துச் சண்டை வீராங்கனை.. மஹிந்திரா நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!!

CRICKET, IPL 2023, STEVE SMITH

மற்ற செய்திகள்