"இந்தியா 'டீம்'ல எல்லாம் ஓகே தான்.. ஆனா, இந்த 'ஏரியா' மட்டும் கொஞ்சம் மோசமாவே இருக்கு.." 'முன்னாள்' வீரரின் கருத்தால் 'பரபரப்பு'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து வரும் தொடர் என்றால், அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான்.

"இந்தியா 'டீம்'ல எல்லாம் ஓகே தான்.. ஆனா, இந்த 'ஏரியா' மட்டும் கொஞ்சம் மோசமாவே இருக்கு.." 'முன்னாள்' வீரரின் கருத்தால் 'பரபரப்பு'!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதவுள்ள இந்த போட்டி, இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி மோதவுள்ளது. இந்த இரண்டு தொடருக்கும் சேர்த்து, 20 வீரர்கள் கொண்ட இந்திய அணி பிசிசிஐ, சில வாரங்களுக்கு முன் தேர்வு செய்துள்ளது.

இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என இரண்டறக் கலந்துள்ள இந்திய அணி, சமீபகாலமாக வெளிநாட்டு மைதானங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி மிக அற்புதமாக செயல்பட்டு, வெற்றி வாகை சூடியிருந்தது. அதிலும் குறிப்பாக, இந்த இரு தொடர்களிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியிருந்தனர்.

இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில், இந்திய ரசிகர்கள் உள்ளனர். மேலும், இந்த தொடர்களுக்கான இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் ரவிச்சந்திரன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளி கார்த்திக் (Murali Karthik), இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு வரிசை குறித்து சில பரபரப்பு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் சில சிக்கல்கள் உள்ளது. சுழற்பந்து வீச்சின் தரம் மற்றும் திறன் வாரியாக பார்த்தால் நிச்சயம் இது புரியும். சுழற்பந்து வீச்சில் மாயாஜாலம் என்பது விக்கெட்டுகளை குறிவைத்து எடுப்பதே ஆகும். கடந்த சில ஆண்டுகளில், அதற்கான திறனை வைத்துப் பார்க்கும்போது அது கீழ் நோக்கி மட்டுமே சென்று கொண்டிருக்கிறது.

இதில் நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. அதே போல, சுழற்பந்து வீச்சிற்கான திறனும் வெகுவாக குறைந்துள்ளது. எனவே நீங்கள் என்னிடம், முன்பு இருந்தது போல தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டால் நான் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லுவேன். முன்பு இருந்ததை விட, இந்திய அணியில் சுழற்பந்து வீச்சு அதிகம் மாறுபட்டுள்ளது' என முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.

முன்பு எல்லாம், சுழற்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்த காலகத்திற்குமான வீரர்கள், அதிகம் இடம்பெற்றிருந்தனர். ஆனால், தற்போது வேகப்பந்து வீச்சாளராகள் அதிகம் இந்திய அணியில் உள்ள நிலையில், சுழற்பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணம் பற்றி தான் முரளி கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்