‘ஐபிஎல், சிபிஎல் லீக் மட்டுமில்ல’... ‘அமெரிக்க டி20 லீகில்’... ‘அதிரடியாக களம் இறங்கும் இந்திய குழுமம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅமெரிக்காவில் வரும் 2022 முதல் துவங்கப்பட உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடரில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது.
இந்திய பிரீமியர் லீக் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் ஒரு அணியை உரிமையாக்கி உள்ளார் பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கான். இவர் மட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவரும் இதில் உரிமையாளர்களாக உள்ளனர்.
இவர்கள் ஐபிஎல்லில் கேகேஆர் அணியையும் சிபிஎல்லில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியையும் செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தி நைட் ரைடர்ஸ் குழுமம் தற்போது அமெரிக்காவின் டி20 லீக் தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் வரும் 2022 முதல் செயல்பட உள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் என்ற எம்எல்சி டி20 தொடரான இதில் 6 அணிகள் இடம்பெறவுள்ளதாகவும், ஐபிஎல் போன்று இல்லாமல் 6 அணிகளும் மொத்தமாக இதில் முதலீடு செய்யும் வகையில் இந்த தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் 6 அணிகளும் இந்த தொடரின் பங்குதாரர்களாக கருதப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தொடர் குறித்தும் அதில் பங்கேற்றுள்ளது குறித்தும் கேகேஆர் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசதிகளை மேம்படுத்தி அங்கு கிரிக்கெட்டை பெரிய அளவில் கொண்டுவர தாங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடிப்படையாக கொண்ட அணியை உருவாக்கி, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் என்ற பெயர் வைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மற்ற செய்திகள்