"அவரு பேசுனாலே குப்பை தான்... வேற வேலையே இல்ல அவருக்கு..." 'முன்னாள்' வீரர்களால் வெடித்த 'சர்ச்சை'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகள் விளையாடவுள்ளது.

"அவரு பேசுனாலே குப்பை தான்... வேற வேலையே இல்ல அவருக்கு..." 'முன்னாள்' வீரர்களால் வெடித்த 'சர்ச்சை'!!!

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது முதல் அதில் இடம்பெற்ற மற்றும் இடம்பெறாத வீரர்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. சூர்யகுமார் யாதவை அணியில் எடுக்காதது, ரோஹித் ஷர்மா காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியது என பல விஷயங்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 'ஐபிஎல் தொடரை வைத்தே ஒரு வீரரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்வது என்பது மிகவும் தவறான முன்னுதாரணம். ராகுல் கடந்த டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடியுள்ளார். இது போன்று வீரரைத் தேர்வு செய்வது ரஞ்சி வீரர்களை பெரிதும் பாதிக்கும்' என தனது டீவீட்டில் மஞ்ச்ரேக்கர் தேர்வுக் குழுவை சாடியிருந்தார்.

இதனையடுத்து, இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'ராகுல் டெஸ்ட் அணியில் தேர்வானதை கேள்வி கேட்பதா?. அதனை நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடியுள்ளார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ரன் குவிப்பில் ராகுல் ஈடுபடவில்லை என்றாலும், வேகப்பந்துகளை அவர் திறமையாக எதிர்கொள்ளும் வீரர். சர்ச்சையை உருவாக்க வேண்டும் எனப்தற்காக கேள்வி கேட்கக் கூடாது. சஞ்சய் மஞ்சரேக்கர் பேசுவது எல்லாம் குப்பை தான்.

நாம் எல்லாம் நடுநிலையாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அப்படியல்ல. அவரைப் போன்ற ஆட்களுக்கு எல்லாமே மும்பை, மும்பை தான். அதனைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது. மும்பையைத் தாண்டி அவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்திய அணியின் தேர்வு பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீகாந்த் மும்பையைத் தாண்டி சஞ்சய் மஞ்சரேக்கர் சிந்திப்பதில்லை என தெரிவித்துள்ள கருத்து மேலும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

மற்ற செய்திகள்