"எல்லாரோட பவுலிங்கையும் போட்டு பொளக்குறான்..." 'பாவம்'ங்க இதுக்கு மேல அவன் என்ன பண்ணுவான்??..." உருகிய முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சில வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 3 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ், இதுவரை ஒருமுறை கூட சர்வதேச அணிக்காக ஆடியதில்லை. இந்நிலையில், நேற்றைய போட்டியில் பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆடிய சூர்யகுமார், அணியை வெற்றி பெறச் செய்தார்.
தன்னைத் தொடர்ந்து அணியில் தேர்வு செய்யாததால் பிசிசிஐ-க்கு சூர்யகுமார் யாதவ் கொடுத்த பதிலடி தான் இது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த், சூர்யகுமார் யாதவிற்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பல போட்டிகளில் மும்பை அணியை வெற்றி பெற வைத்துள்ள சூர்யகுமாரால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும். 'எனக்கா அணியில் இடம் கொடுக்கவில்லை என்று பதிலடி கொடுக்கும் வகையில் அவர் ஐபிஎல் போட்டியில் ஆடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பந்து வீசினாலும் எல்லா திசைகளிலும் பந்துகளை பறக்க விடுகிறார். சாஹல், ஸ்டெயின் என அனைத்து பந்து வீச்சாளர்கள் பந்துகளையும் அவர் சிதறடிக்கிறார். இவரைப் போன்ற வீரரை ஏன் அணியில் எடுக்கவில்லை என ஆச்சர்யமாக உள்ளது.
நான் தேர்வுக் குழுவில் இருந்திருந்தால் நிச்சயம் மனிஷ் பாண்டேவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவை தான் எடுத்திருப்பேன். தேர்வுக் குழு சரியாக செயல்படவில்லை' என ஸ்ரீகாந்த் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்