VIDEO: ‘இந்த வருசம் இந்த ரெக்கார்டுக்கு தான் சீசன் போல’!.. அம்பயர் கையை UP-லயே இருக்க வச்சிட்டாரு மனுசன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

VIDEO: ‘இந்த வருசம் இந்த ரெக்கார்டுக்கு தான் சீசன் போல’!.. அம்பயர் கையை UP-லயே இருக்க வச்சிட்டாரு மனுசன்..!

இலங்கையில் 50 ஓவர்கள் கொண்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் Sri Lanka Army Sports Club மற்றும் Bloomfield Cricket and Athletic Club ஆகிய இரு அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் Sri Lanka Army Sports Club அணியை இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா கேப்டனாக இருந்து வழி நடத்தினார்.

Sri Lankan cricketer Thisara Perera hit 6 sixes in an over

இந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் 50 ஓவர் போட்டி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த Sri Lanka Army Sports Club அணி, 3 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை குவித்தது. இதனை அடுத்து 319 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் Bloomfield Cricket and Athletic Club அணி விளையாடியது. அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் முடிவின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Sri Lankan cricketer Thisara Perera hit 6 sixes in an over

இந்த நிலையில் Sri Lanka Army Sports Club அணியின் சார்பாக விளையாடிய இலங்கை கிரிக்கெட் வீரர் திசரா பெரேரா, 13 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் தில்ஹசன் கூரே வீசிய ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை திசரா பெரேரா படைத்தார்.

Sri Lankan cricketer Thisara Perera hit 6 sixes in an over

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்திருந்தார்.

இந்த நிலையில் இதே ஆண்டே இலங்கை வீரர் திசாரா பெரேராவும் 6 பந்துக்கு 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்