இது கிரிக்கெட்டா, கபடியா.?.. ரன் ஓடும்போது வந்த குழப்பம்.. உருண்டே கிரீஸுக்கு போன ஆப்கான் வீரர்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை ஆப்கானிஸ்தான் போட்டியில் குல்பதின் நயிப் ரன் அவுட் ஆன வீடியோ தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன்-ஆக இருக்கிறது.
Also Read | எலான் மஸ்கின் வேற மாறி ஹாலோவீன் காஸ்ட்யூம்.. ஆனாலும் விலையை கேட்டா தான் திக்குன்னு இருக்கு..!
T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்று போட்டிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த விறுவிறுப்பு தற்போதே அதிகரித்துள்ளது. இந்த தொடரில் க்ரூப் 1-ல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் குரூப்-2 வில் இடம்பெற்றிருக்கின்றன.
இதனிடையே நேற்று இலங்கையை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான். பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை அணியின் வணிந்து ஹஸரங்கா 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை சேஸிங்கை துவங்கியது. 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது இலங்கை. தனஞ்சயா டி சில்வா அபாரமாக ஆடி 66 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் பேட்டிங் இன்னிங்சின் போது, குல்பதின் நயிப் மற்றும் முகமது நபி பேட்டிங் செய்துகொண்டிருந்தனர். அப்போது 18வது ஓவரை தீக்ஷனா வீசினார். அதனை எதிர்கொண்ட நபி மிட் விக்கெட்டில் அடித்துவிட்டு 2 ரன்கள் எடுக்க திட்டமிட்டார். ஆனால், பந்தை நிசாங்கா எடுத்துவிட்டதால் இரண்டாவது ரன் வேண்டாம் என நயிப்-இடம் எச்சரித்தார். ஆனால், அதற்குள், பாதி பிட்ச்சிற்கு வந்துவிட்ட நயிப் தடுமாறி கீழே விழுந்தார். பேட் ஒருபக்க விழ, உருண்டு கிரீஸுக்கு செல்ல முயற்சித்தார் நயிப். ஆனால், அதற்க்குள் கீப்பருக்கு நிசாங்கா பந்தை வீச நயிப் ரன் அவுட் செய்யப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
— Vaishnavi Iyer (@Vaishnaviiyer14) November 1, 2022
Also Read | ட்விட்டர் Blue Tick -க்கான கட்டணத்தை உறுதி செய்த எலான் மஸ்க்.. அடேங்கப்பா இவ்வளவு சலுகைகளா..?
மற்ற செய்திகள்