‘மலிங்காவை தொடர்ந்து மற்றொரு வீரர் ஓய்வு’... ‘அதிர்ச்சியில் ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு அறிவித்ததையடுத்து, மற்றொரு இலங்கை வேகப்பந்து வீச்சாளருமான குலசேகரா உடனடியாக ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கை அணியின் மூத்த வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. வரும் ஜூலை மாதம் 26-ம் தேதி, மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அந்த ஆட்டத்தில் பங்கேற்றபின் ஒருநாள் ஆட்டங்களில் இருந்து விலக உள்ளார் லசித் மலிங்கா. இந்நிலையில் இலங்கையின் மற்றுமொரு மூத்த வீரரான நுவன் குலசேகரா தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார்.
37 வயதான குலசேகரா, இலங்கை அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளிலும், 184 ஒருநாள், 58 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2014-ல் டி20 கோப்பையை வென்ற இலங்கை அணியில் குலசேகராவும் இருந்தார். 2017-க்கு பிறகு அவருக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஏற்கனவே இலங்கை அணி புதிய வீரர்களால் தடுமாறி வரும் நிலையில், குலசேகராவின் ஓய்வு அறிவிப்பு மற்றுமொரு அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.
JUST IN! Nuwan Kulasekara retires from International cricket. #Cricket #T20 #News #HomeofT20 @OfficialSLC pic.twitter.com/QQFsluJ8Ul
— Home of T20 (@HomeofT20) July 24, 2019