"ஐபிஎல் மேட்ச் இருக்கட்டும்.. முதல்'ல ஒரு அரபிக்குத்து போடலாம் வாங்க.." பீஸ்ட் மோடுக்கு போன கிரிக்கெட் வீரர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

"ஐபிஎல் மேட்ச் இருக்கட்டும்.. முதல்'ல ஒரு அரபிக்குத்து போடலாம் வாங்க.." பீஸ்ட் மோடுக்கு போன கிரிக்கெட் வீரர்கள்

Also Read | "இப்படியும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம்.." பட்டையை கிளப்பிய வாஷிங்டன் சுந்தர், நடராஜன்.. வரவேற்பை அள்ளும் வீடியோ

தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் திட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்பதால், இரு அணிகளும் முனைப்புடன் ஆடி வருகிறது.

இதில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இதுவரை நான்கு போட்டிகளில் ஆடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி, அடுத்தடுத்து இரு போட்டிகளில் வென்று, அதிக பலத்துடன் விளங்குகிறது.

அடுத்தடுத்து வெற்றி

கடந்த சீசனில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்த ஹைதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்து, பரிதாபமாக வெளியேறி இருந்தது. இந்த முறை தங்களின் ஃபார்மை நிரூபித்து, வெற்றி பயணத்தை இனிவரும் போட்டிகளில் தொடரும் எண்ணத்திலும் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல், ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோரும் தொடர்ந்து சிறப்பாக தங்களின் அணிக்கு வேண்டி செயல்பட்டு வருகின்றனர்.

SRH young players dance for arabic kuthu song

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், ஹைதராபாத் அணி தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (13.04.2022) பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. முன்னதாக, படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே, பீஸ்ட் படத்தின் பாடல்களான 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' பெரிய அளவில் ஹிட்டடித்திருந்தது.

அரபிக்குத்துக்கு அசத்தல் டான்ஸ்

அதிலும் குறிப்பாக, அரபிக்குத்து பாடலுக்கு உலகளவிலுள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில், தற்போது ஹைதராபாத் அணி வீரர்களும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நடனத்தை ஆரம்பித்து வைக்க, மற்ற இளம் வீரர்களான ப்ரியம் கார்க், அபிஷேக் ஷர்மா மற்றும் சவுரப் துபே ஆகியோரும் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

SRH young players dance for arabic kuthu song

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களின் அடுத்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நாளை (15.04.2022) சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ‘எவ்ளோ தடுத்தும் கேட்கல’.. சச்சின் காலை தொட்டு வணங்கிய PBKS கோச்.. நெகிழ்ச்சி வீடியோ..!

 

CRICKET, SRH, YOUNG PLAYERS, ARABIC KUTHU SONG, DANCE

மற்ற செய்திகள்