‘கோலியே கொஞ்சம் மிரண்டுதான் போயிட்டார்!’ .. “இவரோட யார்க்கர் இருக்கே!” .. அஸ்திவாரத்தையே ‘சைலண்ட்டாக’ அசைத்த ‘புதிய’ டெத் பவுலர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஐபிஎல் சீசனில் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருபவர் தமிழக வீரர் நடராஜன். டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே பிளே ஆப் செல்வதற்கான போட்டி நிலவி வரும் நிலையில்,  நேற்று பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது.

‘கோலியே கொஞ்சம் மிரண்டுதான் போயிட்டார்!’ .. “இவரோட யார்க்கர் இருக்கே!” .. அஸ்திவாரத்தையே ‘சைலண்ட்டாக’ அசைத்த ‘புதிய’ டெத் பவுலர்!

இதில் பெங்களூர் 20 ஓவரில் வெறும் 120 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி, மிக எளிதாக 14.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஹோல்டரும், சந்தீப் சர்மாவும் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.  எனினும் பெங்களூர் அணியின் அஸ்திவாரத்தையே சத்தமில்லாமல் அசைத்த தமிழக வீரர் நடராஜன், ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். விக்கெட் எடுக்க ஆசைப்பட்டு ரன்களை சிக்ஸர் பவுண்டரி என வாரி கொடுக்காமல்.. துல்லியமான யார்க்கர், பவுன்சர்களை போட்டு ரன் ரேட்டை குறைத்து பெங்களூர் அணியின் பிரஷரை கூட்டினார். மற்ற பவுலரின் பந்துகளில் அதிரடி காட்ட முயன்று மோசமாக சொதப்பியும், நடராஜனின் பவுலிங்கில் பந்தை தொட முடியாமலும் அவுட்டானார்கள்.

SRH Player Natarajan's yorkers a treat to watch, says Sandeep Sharma

மொத்தத்தில் 4 ஓவர் போட்ட நடராஜன் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 2.80 ரன்கள் வீதம்தான் ஒரு ஓவருக்கு ரன்களை கொடுத்தார். வாஷிங்க்டன் சுந்தரின்ப் விக்கெட்டையும் வீழ்த்தி, பும்ராவிற்கு இணையாக பந்து வீசிய இவர் புதிய டெத் பவுலராக உருவெடுத்துள்ளார். இவரது துல்லியமாக போடும் யார்க்கர் பந்துகளை பார்த்து கோலியே ஒரு  மிரண்டுதான் போய்விட்டார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

SRH Player Natarajan's yorkers a treat to watch, says Sandeep Sharma

இவரது யார்க்கர் பந்துவீச்சு ஒரு ட்ரீட் என்று ஐதராபாத் அணி வீரர், சந்தீப் ஷர்மா பேசியுள்ளார். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் கூடுதல் பவுலராக இடம் பிடித்து இருக்கும் நடராஜன், ஆடக்கூடிய அணியில் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்