மலிங்காவின் 10 வருச சாதனையை சமன் செய்த SRH இளம் புயல்.. இதுதான் வேறலெவல் சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் சாதனையை உம்ரான் மாலிக் சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. அதில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்களும், எய்டன் மார்க்கம் 56 ரன்களையும் குவித்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 199 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. ஆனாலும் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
அதற்கு காரணம் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். அதனால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் ஹைதராபாத் அணி திணறி வந்தது. அப்போது உம்ரான் மாலிக் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் இலங்கை அணியின் ஜாம்பவான் மலிங்காவின் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் 4 வீரர்களை போல்ட் செய்த பவுலர்களாக மலிங்கா மற்றும் சித்தார்த் திரிவேதி ஆகியோர் உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான மலிங்கா 4 வீரர்களை கிளீன் போல்ட் ஆக்கினார். அதேபோல் சித்தார்த் திரிவேதி 2012-ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக 4 வீரர்களை கிளீன் போல்டாக்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது 10 ஆண்டுகள் கழித்து உம்ரான் மாலிக், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 4 வீரர்களை கிளீன் போல்டாக்கி இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்