‘இப்படி பண்ணிட்டீங்களே Bhuvi’.. முதல் ஓவரே இப்படியா.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசிய நோ பால் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் (35 ரன்கள்) மற்றும் ஜெய்ஷ்வால் (20 ரன்கள்) ஆரம்பமே அதிரடி காட்டினர். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சம்சன் (55 ரன்கள்) தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் (41 ரன்கள்), ஹெட்மையர் (32 ரன்கள்), ரியான் பராக் (12 ரன்கள்) என வந்த அனைவரும் சிக்சர் பவுண்டரி என விளாச, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை ராஜஸ்தான் அணி குவித்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கமே சரிவை சந்தித்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்னிலும், அபிஷேக் சர்மா 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ராகுல் திருப்பதி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். இந்த சமயத்தில் களமிறங்கிய ஐடன் மார்க்ராம் நிதானமாக விளையாடி 57 ரன்கள் குவித்தார்.
அதேபோல் கடைசி கட்டத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் அணி எடுத்தது. அதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசிய நோபால் ரசிகர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதில், போட்டியின் முதல் ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை ஜாஸ் பட்லர் எதிர்கொண்டார். அவர் அடித்த பந்து ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. உடனே ஹைதராபாத் அணி வீரர்கள் அந்த அவுட்டை கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால் புவனேஷ்வர்குமார் பந்து வீசும் போது க்ரீஸை தாண்டி காலை வைத்ததால், அம்பயர் அதை நோ பால் என அறிவித்தார்.
முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்திருந்தால் ராஜஸ்தான் அணியின் ஆட்டம் வேறு மாதிரி மாறி இருக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்து 2017-ம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், பும்ரா வீசிய நோ பாலால் இந்திய அணி கோப்பையை தவறவிட்டது. இதை தற்போது புவனேஷ்வர்குமார் வீசிய நோ பாலுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Dismissal on No ball 🏏😟#SRHvsRR #RoyalFamily #buttler #bhuvneshwar #IPL #ipl2022 #NoBalls pic.twitter.com/zYSzB6sMUU
— Ankit Kunwar (@TheAnkitKunwar) March 29, 2022
மற்ற செய்திகள்