"இதென்னடா 'ஐபிஎல்'க்கு வந்த சோதனை..." இந்த சீசனில் இருந்து நடையைக் கட்டும் '2' முக்கிய 'வீரர்'கள்... 'காரணம்' என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சேர்ந்த அனுபவம் மிக்க சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகவுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியின் போது பந்து வீசிய புவனேஷ்வர் குமார், 19 ஆவது ஓவரில் ஒரு பந்தை மட்டுமே வீசியிருந்த நிலையில், காயம் காரணமாக போட்டியின் பாதியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் புவனேஷ்வர் பங்கேற்கவில்லை. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி ரன்களை வாரி வழங்கியது.
புவனேஷ்வர் குமாருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் ஆட முடியாது என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளரான அவர் ஐபிஎல் தொடரில் ஆடாமல் போவது அணிக்கு நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவாகும். முன்னதாக, ஹைதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியிருந்தார்.
அதே போல, டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் அவரால் ஆட முடியாது என டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இருந்து பல முக்கிய வீரர்கள் விலகி கொண்டிருப்பது ஐபிஎல் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்