VIDEO: 'ஏதோ கண்ணாடி நொறுங்குற சத்தம்...' 'பின்னாடி திரும்பி பார்த்தா...' 'அடிச்ச அடி அப்படி...' 'சல்லி சல்லியா உடைஞ்சிடுச்சே...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021ஆம் ஆண்டின் 14வது ஐபிஎல் சீசனின் 9வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சன்ரைஸ் ஹைதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிஙை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 150 ரன்களை கைப்பற்றியது. மேலும் அதிகபட்சமாக டீகாக் 40 மற்றும் ரோதித் சர்மா 32 ரன்களையும் எடுத்துள்ளார்.
பவுலிங்கை பொறுத்தவரை விஜய் ஷங்கர் மற்றும் அபிஷேக் சர்மா தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை காட்டு மும்பையை மிரள செய்தது. தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ 43 ரன்கள் மற்றும் டேவிட் வார்னர் 36 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார்கள்.
அதன்பின் தான் ஹைதராபாத் அணிக்கு விள்ளங்கம் ஏற்பட்டது. தொடக்க வீரர்களை தவிர்த்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.
ஆறுதலாக விஜய் ஷங்கர் மட்டும் இறுதி வரை விக்கெட் இழக்காமல் 28 ரன்கள் அடித்தார். 19.4 ஓவரில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்களையும் இழந்து ஹைதராபாத் அணி தோல்வியுற்று, மும்பை 13 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை பெற்றது.
மும்பையின் பவுலிங்கில் போல்ட் மற்றும் ராகுல் சஹார் தலா 3 விக்கெட்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர்.
மும்பை பவுலர் வீசிய 3-வது ஓவரில் பேர்ஸ்டோ அடித்த சிக்ஸர் பவுண்டரி லைனிற்கு வெளியே வைத்திருந்த ஃபிரிட்ஜில் பந்து பட்டு கண்ணாடி நொறுங்கியது. அருகில் அமர்ந்திருந்த ஹைதராபாத் அணியினர்கள் அனைவரும் பயந்து போய் ஓடிய வீடியோ சமூக வலைதளங்கிளில் வைரலாகி வருகிறது.
— Aditya Das (@lodulalit001) April 17, 2021
மற்ற செய்திகள்