"டிராவிட்டை தப்பா பேசினேனா?".. "சிஎஸ்கேவுக்கு எதிரா ஆடணும்னு நெனைச்சேன்!".. மனம் திறந்த கிரிக்கெட் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுடன் பிரச்சனை தொடர்பான கேள்விகளுக்கு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பதில் கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள், 53 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடிய ஸ்ரீசாந்த், கடந்த 2011-ஆம் ஆண்டு கடைசியாக சர்வதேச போட்டிகளில் விளையாடினார். இந்த நிலையில் ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, அவருக்கு பிசிசிஐ ஆயுள் தடை விதித்தது. ஆனால் பின்னர் நீதிமன்றத்தின் மூலம் இந்தத் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதன்படி, ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், அவர் மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே சமூக வலைதளஙகளில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதனிடையே, ஸ்பாட் பிக்ஸிங் ஊழலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு தன்னிடம் பொருத்தமற்ற சொற்களை ஸ்ரீசாந்த் பயன்படுத்தியதாகவும், மேலும் தன்னுடனும் டிராவிட்டுடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பேடி அப்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்ரீசாந்த், “டிராவிட் சிறந்த கேப்டன், நான் அவரை தவறாக பேசவில்லை. சிஎஸ்கே போட்டியின்போது அணியில் இல்லை என்பதால, நான் கோபமடைந்தேன். ஆனால் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடி, வெற்றிபெற விரும்பினேன். பின்னர் டர்பன் போட்டியில் விளையாண்டு தோனிக்கு எதிரான விக்கெட்டை எடுத்தேன். ஆனால் அதன் பின் சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாட வாய்ப்பு வரவில்லை. குழுநிர்வாகம் ஒருபோதும் சரியான காரணத்தைத் தந்ததில்லை. நான் தோனி அல்லது சிஎஸ்கேவை வெறுக்கவில்லை. சிஎஸ்கே ஜெர்ஸியும் ஆஸ்திரேலிய ஜெர்ஸியும் ஒரே மாதிரி இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.