"இந்த உலகமே என்னை எதிர்த்தாலும்... நான் 'திரும்ப' வருவேன்..." 'தல' வசனத்துடன் கிரிக்கெட் 'வீரர்' போட்ட 'வீடியோ'... வேற லெவலில் 'வைரல்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் ஏலம் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்காக 1114 வீரர்கள் இந்த முறை ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து, பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

"இந்த உலகமே என்னை எதிர்த்தாலும்... நான் 'திரும்ப' வருவேன்..." 'தல' வசனத்துடன் கிரிக்கெட் 'வீரர்' போட்ட 'வீடியோ'... வேற லெவலில் 'வைரல்'!!!

இந்த பெயர் பட்டியலில் இருந்து மொத்தம் 292 வீரர்களை மட்டுமே ஏலப் பட்டியலில் இணைத்துள்ளது. இதன் அதிகாரபூர்வ பட்டியல் நேற்று வெளியான நிலையில், அனுபவ வீரர் ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஸ்ரீசாந்தை தடை செய்திருந்த நிலையில், தடைக்காலம் முடிந்து அவர் மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாதம் நடைபெற்ற சையது முஷ்டாக் தொடரிலும் ஸ்ரீசாந்த் விளையாடினார். 38 வயதாகும் ஸ்ரீசாந்த், மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவதே தனது நோக்கம் என கூறியிருந்தார். ஐபிஎல் தொடரிலும் இந்த முறை கலந்து கொள்வதில் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது பெயர் இடம்பெறாமல் போனது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்ட ஸ்ரீசாந்த், தான் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் அஜித்தின் விவேகம் படத்தின் வரும் வசனத்தை குறிப்பிட்டு, என்னை வெல்ல முடியாது, நான் திரும்ப வருவேன். நான் துவண்டு போகப் போவதில்லை. எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி' என புத்துணர்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாது, அஜித் ரசிகர்களிடையேயும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்