பீல்டிங் நின்னது ஒரு குத்தமா.. வீரரை பதம் பார்த்த ஸ்பைடர் கேமரா.. கிரவுண்ட்ல நடந்த சம்பவம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின்போது தென்னாப்பிரிக்க வீரர் ஸ்பைடர் கேமரா தாக்கியதால் கீழே தடுமாறி விழுந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

பீல்டிங் நின்னது ஒரு குத்தமா.. வீரரை பதம் பார்த்த ஸ்பைடர் கேமரா.. கிரவுண்ட்ல நடந்த சம்பவம்.. வீடியோ..!

Also Read | 145 வருஷ டெஸ்ட் வரலாற்றுல இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்ல.. பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. சிட்னியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3 போட்டிகளை கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா(1), மார்னஸ் லபுஷேன்(14) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

Spider camera knocks down Anrich Nortje during AUS vs SA Test

இருப்பினும் வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் நிதானமான ஆட்டதை வெளிப்படுத்தினார். 83 ரன்கள் எடுத்த ஸ்மித் அவுட்டாக மற்றொரு புறம் வார்னர் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து அனைவரையும் திக்குமுக்காட செய்தார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சதமடிக்க அந்த அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

Spider camera knocks down Anrich Nortje during AUS vs SA Test

இந்த போட்டியில் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியா பீல்டிங் செய்துகொண்டிருந்த போது, அந்த பக்கம் ஸ்பைடர் கேமரா ஒன்று வேகமாக சென்றது. அதனை கவனிக்காமல் நோர்க்கியா நிற்க, திடீரென்று அவரது தலையில் ஸ்பைடர் கேமரா மோதியது. இதனால் அப்படியே கீழே விழுந்த நோர்க்கியா பின்னர் நடந்ததை அறிந்து எழுந்தார். இதனை கண்ட சக வீரர்கள் அவரிடம் ஓடினர். அவரது உடல்நலம் குறித்து வீரர்கள் விசாரித்த நிலையில் சிறிது நேரத்துக்கு பிறகு போட்டி மீண்டும் துவங்கியது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

Also Read | "உங்களை நேர்ல சந்திச்சு நன்றி சொல்லணும்".. முதல்வருக்கு கடிதம் எழுதிய 3 ஆம் வகுப்பு மாணவி.. நெகிழ்ச்சி பின்னணி..!

CRICKET, SPIDER CAMERA, ANRICH NORTJE, AUS VS SA, AUS VS SA TEST

மற்ற செய்திகள்