‘ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கு’!.. புதிய ஐபிஎல் அணியை வாங்கிய இவர் யாருன்னு தெரியுதா..? வெளியான ‘சுவாரஸ்ய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணியை வாங்கிய தொழிலதிபர் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு ஐபில் (IPL) டி20 தொடரை பிசிசிஐ (BCCI) தொடங்கியது. இதுவரை 14 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி நேற்று துபாயில் இதற்கான ஏலம் நடைபெற்றது.
அதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாகக் கொண்டு ஒரு அணியும், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை மையமாகக் கொண்டு மற்றொரு அணியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் லக்னோ அணியை ரூ.7090 கோடிக்கு ஆர்பிஎஸ்ஜி குழுமத்தின் (RPSG Group) தலைவர் சஞ்சீவ் கோயங்கா (Sanjiv Goenka) வாங்கியுள்ளார். அதேபோல் அகமதாபாத் அணியை ரூ.5600 கோடிக்கு சிவிசி கேபிடல்ஸ் (CVC Capital) நிறுவனம் வாங்கியுள்ளது.
ஆரம்பத்த்தில் ரூ.2000 கோடியை அடிப்படையாகக் கொண்டு ஏலம் தொடங்கப்பட்டது. அப்போது அதிகபட்சமாக சஞ்சீவ் கோயங்கா ரூ.7090 கோடிக்கு லக்னோ அணியை ஏலத்தில் எடுத்தார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சூதாட்ட புகார் காரணமாக கடந்த 2016-2017 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தன. அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு அணிகளில், ரைசிங் புனே ஜெய்ண்ட்ஸ் (Rising Pune Supergiant) அணியை ஆர்பிஎஸ்ஜி குழுமம் தான் வாங்கியது.
அப்போது 2016-ம் ஆண்டு தோனி தலைமையில் விளையாடிய புனே அணி 7-வது இடத்தை பிடித்தது. இதனை அடுத்து 2017-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் புனே அணி விளையாடியது. அந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்று மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், லக்னோ அணியை ஏலத்தில் எடுத்தபின் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்கு பேட்டியளித்த சஞ்சீவ் கோயங்கா, ‘மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் நுழைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் லக்னோ நகரை மையமாகக் கொண்ட அணி வேண்டும் என்றே விரும்பினோம்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இது வெறும் ஆரம்பம் மட்டும்தான். உண்மையான நோக்கம் என்னவென்றால், ஒரு அணியை உருவாக்கி ஐபிஎல் தொடரில் வெற்றி பெற வேண்டும். நீங்கள் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், கடந்த 2017-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரைசிங் புனே ஜெய்ண்ட்ஸ் தோல்வியடைந்தது. அதனால் ஐபிஎல் தொடரில் முடிக்கப்படாத வியாபாரம் ஒன்று இருக்கிறது’ என சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்