VIDEO : இன்னும் ஒரு 'step' எடுத்து வெச்சுருந்தா ஜெயிச்சுருக்கலாம்... ஆனாலும் 'ஓடாம' அடுத்து வந்தவர 'ஜெயிக்க' வெச்ச 'Athlete',,.. 'காரணம்' என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஒன்றில் தடகள வீரர் ஒருவர் செய்த செயல் நெட்டிசன்கள் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில், மூன்றாவது இடத்தை பிடிக்க வேண்டி, ஸ்பெயினை சேர்ந்த டிகோ மென்ட்ரிகா (Diego Mentriga) என்பவரும், பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் டீகில் (James Teagle) என்பவரும் இறுதி லைனுக்கு அருகே வந்தனர். அப்போது, வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்த ஜேம்ஸ், எதிர்பாராத விதமாக தவறான பாதையில் சென்றுள்ளார். இதனை பயன்படுத்தி டிகோ மென்ட்ரிகா, முன்னேறிச் சென்றார்.
ஆனால், லைனுக்கு அருகே வரைச் சென்ற டிகோ, கோட்டை தாண்டாமல் ஜேம்ஸ் வரும் வரை காத்திருந்து அவரை கோட்டையைக் கடக்கச் செய்தார். 'இறுதி வரை என்னை விட வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த ஜேம்ஸ், கோட்டுக்கு அருகே வரும் போது தவறான பாதையை நோக்கிச் சென்றார். இந்த வெற்றி அவருக்கு ஆனது. அதனால் தான் நான் அப்படி செய்தேன்' என பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
தான் வெற்றி வாய்ப்பு இருந்தும், அதனைச் செயல் உரியவருக்கு தான் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக டிகோ மென்ட்ரிகா செய்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது லைக்குகளையும், பாராட்டுக்களையும் அளித்து வருகின்றனர்.
When Spanish triathlete Diego Méntriga noticed that British triathlete James Teagle went the wrong way before finish line of Santander Triathlon,Mentriga waited for him so he could take what he says is his deserved 3rd place.“He was in front of me the whole time.He deserved it.” pic.twitter.com/5Mo52QZ3rJ
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) September 19, 2020
மற்ற செய்திகள்