T20 வரலாற்றுலேயே மிகப்பெரிய ரன் சேசிங்.. தென்னாப்பிரிக்க அணியின் இமாலய சாதனை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. கிரிக்கெட் வட்டாரத்தில் இதுதான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

T20 வரலாற்றுலேயே மிகப்பெரிய ரன் சேசிங்.. தென்னாப்பிரிக்க அணியின் இமாலய சாதனை..!

                           Images are subject to © copyright to their respective owners.

மேற்கு இந்திய தீவுகள் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சென்சூரியனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்தது.

Images are subject to © copyright to their respective owners.

அந்த அணியின் சார்லஸ் அபாரமாக ஆடி 118 ரன்களை குவித்தார். 46 பந்துகளை சந்தித்த சார்லஸ் 10 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்களை விளாசினார். அதேபோல் மேயர்ஸ் 27 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் பலனாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை குவிந்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணியின் குயின்டன் டீ காக் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டினார். 44 பந்துகளை சந்தித்த அவர் 100 ரன்களை விளாசினார். இதில் 9 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் அடக்கம். அதேபோல மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஹென்ரிக்ஸ் 28 பந்துகளில் 68 ரன்களை விளாசினார். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 18.5 ஓவர்களில் 259 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு முன் 2022ல் செர்பியாவை வீழ்த்த பல்கேரியா 246 ரன் எடுத்ததே அதிகபட்ச ரன் சேஸ் ஆகும். 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்தை அணிக்கு எதிரான சேஸிங்கில் ஆஸ்திரேலியா 245 ரன் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் T20 போட்டியில் அதிகபட்ச சேசிங் என்ற சாதனையை இந்தப் போட்டியின் மூலம் படைத்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.

SOUTH AFRICA, WEST INDIES, T20

மற்ற செய்திகள்