‘ஆமா, இது கம்ப்ளீட்டா வேற டீம்’!.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. சைலண்டா அடுத்த அறிவிப்பை வெளியிட்ட கங்குலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள வீரர்கள் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரின் விளையாடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீடு திரும்பினர். இந்தியாவில் கொரோனா பரவலை பொறுத்து எஞ்சிய போட்டிகளை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இதில் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரஹானே, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதே அணிதான், அடுத்து வரவுள்ள இங்கிலாந்து தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்தது. இதில் கே.எல்.ராகுல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ளதாலும், சாஹாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாலும், இவர்கள் இருவர் மட்டும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜூலை மாதம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாக Sportstar சேனலுக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், ‘ஆமாம், வரும் ஜூலை மாதம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் வொயிட் பால் ஸ்பெஷலிஸ்ட் அணி விளையாட உள்ளது. இது ஒரு புதிய அணி’ என கங்குலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடரில் விளையாட உள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இடம்பெற உள்ளதாகவும், இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் பொறுப்பை கவனிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்