'47 ரன்னுக்கு ஆல் அவுட்'... ‘திரும்பி பார்க்க வைத்த சோபி பொண்ணு’...!!! ‘லாக் டவுனால தான் தெறிக்க விட முடிஞ்சுது’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அமீரகத்தில் 2020 ஐபிஎல் தொடரின் நடுவே, மூன்று அணிகள் மோதும் மகளிர் டி20 சேலஞ்ச் எனும் மினி டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

'47 ரன்னுக்கு ஆல் அவுட்'... ‘திரும்பி பார்க்க வைத்த சோபி பொண்ணு’...!!! ‘லாக் டவுனால தான் தெறிக்க விட முடிஞ்சுது’...!!!

மினி டி20 தொடரில், இரண்டாவது லீக் போட்டி ஷார்ஷாவில் நடைபெற்றது. இதில் வெலாசிட்டி - ட்ரெயில்பிளேசர்ஸ் அணிகள் மோதின. முதலில் வெலாசிட்டி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மிதாலி ராஜ் கேப்டனாக இருக்கும் வெலாசிட்டி அணிக்கு ஷபாளி வர்மா - டேனியல் வியாட் துவக்கம் அளித்தனர். டேனியல் நிதான ஆட்டம் ஆடினார்.

3-வது ஓவரில் ஷபாளி வர்மாவை வீழ்த்தி கோஸ்வாமி முதல் திருப்பத்தை ஏற்படுத்தினார். அதன் பின் இங்கிலாந்து வீராங்கனை சோபி தன் சுழற் பந்துவீச்சு மூலம் வெலாசிட்டி அணியை திக்குமுக்காட வைத்து மிரள வைத்தார். மிதாலி ராஜ் 1, வேதா கிருஷ்ணமூர்த்தி 0, சுஷ்மா வர்மா 1 என வரிசையாக விக்கெட்கள் சரிந்துகொண்டே சென்றது.

சோபி தன் சுழற் பந்துவீச்சின் மூலம் 4 விக்கெட்களை சாய்த்தார். கோஸ்வாமி 2 விக்கெட்களும், ராஜேஸ்வரி 2 விக்கெட்களும் வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் வெலாசிட்டி அணி 27 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து பரிதாப நிலையில் இருந்தது. வெலாசிட்டி ஆணி 15.1 ஓவர்களில் 47 ர அங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மிக பரிதாப நிலையில் காட்சி அளித்தது வெலாசிட்டி அணி. 48 ரன்கள் என்ற சிறிய இலக்கை 7.5 ஓவர்களில் எட்டினர் ட்ரெயில்பிளேசர்ஸ் அணியினர்.

தன் சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய சோபி ‘லாக்டவுனில் விடாமல் பயிற்சி செய்தது இப்போது பலன் அளித்துள்ளது’ என்று கூறினார். மேலும், சேஸிங் துவங்கும் முன்பே அவர், ‘8 ஓவர்களில் இந்த இலக்கை நாங்கள் எட்டி விடுவோம்’ என்றார். இங்கிலாந்து அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளரான சோபி எக்கிளேஸ்டோன் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்