Naane Varuven M Logo Top

Ind vs SA T20 : "என்னையும் டீம்'ல சேர்த்துக்கோங்க".. திடீர்ன்னு மைதானத்தில் நுழைஞ்ச பாம்பு.. திகில் கிளப்பிய சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம் ஒன்று கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Ind vs SA T20 : "என்னையும் டீம்'ல சேர்த்துக்கோங்க".. திடீர்ன்னு மைதானத்தில் நுழைஞ்ச பாம்பு.. திகில் கிளப்பிய சம்பவம்!!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆட உள்ளது.

இதில் முதலாவதாக தற்போது டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் வைத்து நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இதனையடுத்து, தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள், இரண்டாவது டி 20 போட்டியில் மோதி வருகிறது. இந்த போட்டி, குவஹாத்தியில் வைத்து தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

snake enters in cricket ground while ind vs sa t 20 match

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருந்தனர். இருவருமே ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இந்நிலையில், விறுவிறுப்பாக போட்டி சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென மைதானத்தில் நடந்த சம்பவம் ஒன்று கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 ஓவர்கள் முடிவில், இந்திய அணி விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் 68 ரன்கள் எடுத்திருந்தது. அந்த சமயத்தில், மைதானத்திற்குள் பாம்பு ஒன்று தென்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் மைதானத்தில் பாம்பு ஒன்று உலவுவதைக் கண்டதும் இது பற்றி ராகுல் மற்றும் போட்டி நடுவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

snake enters in cricket ground while ind vs sa t 20 match

இதனைத் தொடர்ந்து, உடனடியாக மைதானத்தில் உள்ள பணியாளர்கள் தேவையான உபகரணங்களுடன் மைதானத்திற்கு வந்து பாம்பை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு சில நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் பின் சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் போட்டி நடத்தப்பட்டது. மைதானத்தில் பாம்பு என்ட்ரி கொடுத்தது வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

 

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பாம்பு எப்படி மைதானத்திற்குள் வந்திருக்கும் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

KLRAHUL, ROHIT SHARMA, IND VS SA, SNAKE

மற்ற செய்திகள்