'யாரு சார் இந்த பொண்ணு, இப்படி வெளுத்து வாங்கிட்டாங்க'... 'சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை'... கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தது அசத்தியுள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கப் பெண்கள் கிரிக்கெட் அணி, 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்தது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் மிதாலிராஜ் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41 ஓவர்களில் 157 ரன்னில் சுருண்டது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முந்தைய தோல்விக்கான தக்க பதிலடியை இந்திய அணி கொடுத்தது.
இந்த போட்டியில் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 80 ரன்கள் அடித்தார். இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா படைத்தார்.
அதோடு மட்டுமல்லாமல் ஆடவர், மகளிர் என இரு பிரிவு கிரிக்கெட்டிலும் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்களை விளாசியவர் என்ற பெருமையையும் மந்தனா தற்போது பெற்றுள்ளார். நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 9 அரை சதங்களை விளாசியதே முந்தைய சாதனையாக இருந்தது. ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சாதனையை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
A quickfire 5⃣0⃣ for @mandhana_smriti
A vital partnership between @raut_punam and Smriti#TeamIndia in a solid position in the chase in the 2nd @Paytm #INDWvSAW ODI in Lucknow.
Follow the match 👉 https://t.co/cJaryEyTw5 pic.twitter.com/Jg39XcBqdM
— BCCI Women (@BCCIWomen) March 9, 2021
மற்ற செய்திகள்