‘சொன்னதை செஞ்சு காட்டிய டிராவிட்’!.. எல்லார் முகத்துலையும் அப்படியொரு சந்தோஷம்.. உண்மையாவே மனுஷன் ‘வேறலெவல்’ தாங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 5 அறிமுக வீரர்கள் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஒருநாள் தொடர் கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 ஒருநாள் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று (23.07.2021) நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சொந்தமண்ணில் தொடரை இழந்துள்ள இலங்கை அணி, கடைசி ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் வொய்ட்வாஷ் செய்து தொடரை வெல்ல வேண்டும் என இந்திய அணியும் வேகம் காட்டி வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியில் 5 அறிமுக வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அதில் சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, ராகுல் சஹார், சேத்தன் சக்காரியா மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் உள்ளிட்ட 5 இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
🎥 🎥: That moment when the 5⃣ ODI debutants received their #TeamIndia cap!👏 👏 #SLvIND@IamSanjuSamson | @NitishRana_27 | @rdchahar1 | @Sakariya55 | @gowthamyadav88 pic.twitter.com/1GXkO13x5N
— BCCI (@BCCI) July 23, 2021
முன்னதாக, இலங்கை தொடருக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதும், தன்னுடைய தலைமையின் கீழ் விளையாடவுள்ள இந்திய அணியில், அனைத்து வீரர்கள் நிச்சயமாக விளையாடுவார்கள் என்றும், வாய்ப்பு கிடைக்காமல் யாரும் செல்லமாட்டார்கள் என்றும் டிராவிட் கூறியிருந்தார்.
அவர் கூறியதுபோலவே இப்போட்டியில் அறிமுகமான 5 வீரர்களும் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். 41 ஆண்டுகால இந்திய அணியின் வரலாற்றில் 5 அறிமுக வீரர்கள் ஒருநாள் போட்டியில் விளையாடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சமூக வலைதளங்களில் ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்