'சிட்னி மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத சிராஜ்'... 'பின்னணியில் இருக்கும் நெகிழ்ச்சி காரணம்'... உருகவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிட்னி மைதானத்தில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது. இது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்த போதுதான் சிராஜின் தந்தை காலமானார். ஆனால் தந்தையின் இறப்புக்குக் கூட வராமல் இந்திய அணிக்காக சிராஜ் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கையில் பந்துவீச்சாளர் சிராஜ், தன்னை மீறி கண் கலங்கினார். இந்தியத் தேசிய கீதத்தால் நெகிழ்ச்சியடைந்த சிராஜுக்கு கண்ணீர் வழிந்தோடியது. பின்னர் கைகளால் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட சிராஜ் உற்சாகமாக விளையாடத் தொடங்கினார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் சிராஜ் தாய் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றினை குறித்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
சிராஜுக்கு தாய் நாட்டின் மீதான பற்றை இந்த சம்பவம் பறைசாற்றுவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக, ''நான் கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்குப் பிடிக்கும். இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெறச் செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாகச் செலுத்துவேன்'' என சிராஜ் உறுதி ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
✊ #AUSvIND pic.twitter.com/4NK95mVYLN
— cricket.com.au (@cricketcomau) January 6, 2021
மற்ற செய்திகள்