"இதுக்கு எல்லாம் 4 ரன் குடுப்பீங்களா?".. நடுவரிடம் விவாதத்தில் ஈடுபட்ட சிராஜ்.. பரபரப்பை கிளப்பிய சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.
Also Read | "என்ன என்ன உணவுகளோ, மாமியார் வெச்ச விருந்தினிலே".. 125 உணவுகளுடன் வருங்கால மருமகனை மிரள வைத்த விருந்து!!
இதில் முதலாவதாக நடைபெற்ற டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் நேற்று (09.10.2022) மோதி இருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 79 ரன்களும், ஹென்ரிக்ஸ் 74 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில், சிராஜ் 38 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், இஷான் கிஷன் 93 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 113 ரன்களும் எடுக்க, 46 ஆவது ஓவரில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. இதனால், ஒரு நாள் தொடரும் தற்போது சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி, நாளை (11.10.2022) நடைபெற உள்ளது.
இதனிடையே, இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் செய்த விஷயம் ஒன்று கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 48 ஆவது ஓவரை சிராஜ் வீசினார். அப்போது பந்தை எதிர்கொண்ட கேசவ் மஹாராஜ், அதனை தவற விட கீப்பர் சஞ்சு சாம்சன் கைக்கு பந்து சென்றது. இதன் பின்னர், பந்தினை சிராஜ் கைக்கு அவர் த்ரோ செய்தார். மறுபக்கம், நான் ஸ்ட்ரைக்கர் சைடில் நின்ற டேவிட் மில்லர், கிரீஸ் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்டதும் அவரை ரன் அவுட் செய்யும் முயற்சியில் பந்தினை ஸ்டம்பை நோக்கி எறிந்தார் சிராஜ்.
ஆனால், ஸ்டம்பில் படாமல் நேரடியாக பவுண்டரி லைனை கடந்தது. இதனால், நடுவரும் ஃபோர் என அறிவித்தார். பந்து வீச்சாளர் கையில் கீப்பர் பந்தை எறிந்ததும் அது டெட் ஆகி விட்ட நிலையில், பவுண்டரியை அறிவித்தது பற்றி சிராஜ் நடுவரிடம் விவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், ஒருவேளை ரன் அவுட்டாக மாறி இருந்தால், அதனை சிராஜ் எப்படி கையாண்டிருப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
waah bhai #siraj pic.twitter.com/3uZQ95XjM3
— Cricket fan (@Cricket58214082) October 9, 2022
Also Read | தான் பிறந்த கருவிலேயே குழந்தை பெற்றெடுக்க முடிவெடுத்த பெண்?!.. சாத்தியமா? வியக்க வைக்கும் பின்னணி!
மற்ற செய்திகள்