"ரெக்கார்ட் பண்றத மட்டும் வேலையா வெச்சுக்கிட்டா எப்படி பாஸ்?".. ரோஹித், ராகுல், கோலி வரிசையில் சுப்மன் கில்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வந்த டி 20 தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners
இரு அணிகளுக்கும் இடையே முதலில் நடைபெற்றிருந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இதற்கடுத்து நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி போராடி கடைசி ஓவரில் வெற்றி பெற்றிருந்தது.
இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால், கடைசி போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகவும் மாறி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்த அதிரடியாக ஆடி ரன் குவிந்திருந்தது. அதிலும் தொடக்க வீரர் சுப்மன் கில் ஆரம்பத்திலிருந்தே பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி இருந்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 63 பந்துகளில் 12 ஃபோர்கள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் மற்றும் சதம் ஆகியவற்றை விளாசி பல்வேறு சாதனைகளையும் அடித்து நொறுக்கி இருந்தார் சுப்மன் கில். தொடர்ந்து தற்போது டி20 போட்டியிலும் அவர் அடித்த சதம், இந்திய அணிக்காக ஒரு வீரர் அடித்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் டி 20 போட்டிகளில் பதிவாகி உள்ளது. அதேபோல டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்று சிறப்பையும் சுப்மன் கில் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இந்திய வீரர்கள் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சதமடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து இந்த சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners
இதற்கடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, முதல் ஓவரில் இருந்தே விக்கெட்டுகளை இழக்க தொடங்க, 13 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
மற்ற செய்திகள்