அசத்தும் ஸ்ரேயாஸ் ஐயர்.. மிரள வைக்கும் ‘பழைய’ ரெக்கார்டுகள்.. நீங்களே பாருங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் இடம் பெற்றுள்ள டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடக்கூடியவர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 2.6 கோடி ரூபாய்க்கு ஷ்ரேயாஸ் ஐயரை (Shreyas Iyer) டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியபோது, அவர்தான் அப்போது தலைப்புச் செய்தியாக இருந்தார். அந்த அளவுக்கு விரட்டி விரட்டி அடித்தார். அப்போது ஐபிஎல்-ல் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 439 ரன்கள் குவித்து, ஐபிஎல் தொடரில் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.
இது ஒருபக்கம் எனில் ரஞ்சி டிராபியில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் பலரையும் வாயை பிளக்க வைத்தது. அப்போது அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற அமைதியான கிசுகிசுக்கள் உரத்த கோரஸாக மாறியது. அவர் ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் ஒரு சதம் உட்பட,1321 ரன்களைக் குவித்தார். ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் சராசரி 73.38 ஆக இருந்தது. இதன்மூலம் மும்பை அணி 4-வது முறையாக பட்டம் பெறுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர் காரணமாக இருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2014-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் பிளேஆஃப்-ல் அரை சதம் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 813 ரன்கள் குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 100.37 ஆகும். ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 28 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 580 ரன்கள் குவித்துள்ளார். அதில் இவரது 132.11 ஸ்டிரைக் ரேட் ஆகும்.
🎥 A moment to cherish for @ShreyasIyer15 as he receives his #TeamIndia Test cap from Sunil Gavaskar - one of the best to have ever graced the game. 👏 👏#INDvNZ @Paytm pic.twitter.com/kPwVKNOkfu
— BCCI (@BCCI) November 25, 2021
அதேபோல் 120 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 4180 ரன்கள் குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 128.65 ஆகும். கடந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி அசத்தினார். இந்திய டெஸ்ட் அணியில் முதல் முதலாக இடம்பெற்றுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் இதிலும் கலக்குவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் போட்டியிலேயே தற்போது 75 ரன்களை குவித்து தொடர்ந்து ஆடி வருகிறார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, நல்ல துவக்கத்துடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.
மற்ற செய்திகள்