‘ஹிட்மேன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக’... ‘டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக’... ‘ இந்த இளம் வீரருக்கு’... ‘அடிக்கப்போகும் சான்ஸ்’???...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் காரணமாக ரோகித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் ஆஸ்திரேலிய செல்ல முடியாமல் போகலாம் என கூறப்படும் நிலையில், அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் ஓரளவு குணமான நிலையில் தன் உடற்தகுதியை நிரூபிக்க தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இந்தியாவில் தங்கி உள்ளார். டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த அகாடமி அவருக்கு சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவரால் ஆஸ்திரேலியாவில் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
மற்ற வீரர்களுடன் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலியா அனுப்பாமல் இந்தியாவுக்கு அனுப்பி உடற்தகுதியை நிரூபிக்க சொன்ன இந்திய அணி, தற்போது அவர் இன்னும் நான்கு நாட்களுக்குள் ஆஸ்திரேலியா வரவில்லை என்றால் டெஸ்ட் அணியில் சேர்ப்பது கடினம் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் காயத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்பதால், அவர்களால் டெஸ்ட தொடர்களில் பங்கேற்க முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் சேர்ந்து, ரோகித் சர்மாவுக்கு மாற்று வீரரை தயார் செய்து வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் டெஸ்ட் தொடரிலும், தவானுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார் எனக் கூறப்பட்டு வருகிறது.
சுப்மன் கில் பெயர் பரிசீலனையில் இருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை பிசிசிஐ விரைவில் வெளியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மூத்த வீரரான வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக, முகமது சிராஜ் கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக அணியில் இடம் பெற்றுள்ளார்.
மற்ற செய்திகள்