“அவரை எதுக்கு முன்னாடியே அனுப்புனீங்க?”.. KKR கோச்சிடம் கோபமாக பேசிய ஸ்ரேயாஸ்.. கடைசி நேரத்தில் நடந்த பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லமிடம் கோபமாக பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Also Read | ‘இவர் இப்படி கோவப்பட்டு பார்த்ததே இல்லயே’.. தமிழக வீரரை கடுமையாக சாடிய கேப்டன்.. அப்படி என்ன நடந்தது..?
ஐபிஎல் தொடரில் 30-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 103 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதனை அடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். இதில் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் சுனில் நரேன் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் ஆரோன் பின்ச் கூட்டணி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 58 ரன்கள் எடுத்திருந்தபோது ஆரோன் பின்ச் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த நிதிஷ் ராணா 18 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களில் அவுட் ஆனார். அதனால் 178 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தது.
இதனை அடுத்து சிவம் மாவி பேட்டிங் செய்ய களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷெல்டன் ஜாக்சன் களமிறங்கினார். அவரும் 8 ரன்கள் அடித்து வெளியேற, அடுத்து வந்த சிவம் மாவி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து பேட் கம்மின்ஸ் வந்த வேகத்தில் வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயரும் எல்பிடபுள்யூ ஆகி அவுட்டானார்.
இதனைத் தொடர்ந்து பெவிலியன் திரும்பும்போதும், அணி இக்கட்டான நிலையில் இருந்த போது சிவம் மாவிக்கு முன்பாக ஷெல்டன் ஜாக்சனை களமிறக்கியது குறித்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லத்திடம் ஸ்ரேயாஸ் ஐயர் சற்று கோபமாக கேட்டார். ஆனால் மெக்கல்லம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், இப்போட்டியில் 19.4 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் கொல்கத்தா அணி இழந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
— Diving Slip (@SlipDiving) April 18, 2022
மற்ற செய்திகள்