VIDEO: ஹாய் பஜ்ஜி...! நாங்க 'வாக் ஓவர்' கொடுக்கணுமா? ஐயோ, பாவம் நீங்க... 'கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க...' - முன்னாள் இந்திய வீரரை 'கலாய்த்து' தள்ளிய அக்தர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 உலகக்கோப்பை இந்தியா பாகிஸ்தான் தொடருக்கு முன்பு ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் அணியை கலாய்த்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஷோயப் அக்தர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பல ஆண்டுகளுக்கு பின் நேற்று டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதியது. இதற்கு முன் 12 ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலும் இந்தியாவே வென்றது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஷோயப் அக்தரைக் கலாய்க்கையில், 'நீங்களாவது, ஜெயிக்கறதாவது, எப்படியும் நாங்க தான் ஜெயிக்கப் போறோம், வாக் ஓவர் கொடுத்துடுங்க பாகிஸ்தான். விளையாடி என்ன பயன்?' எனக் கூறியுள்ளார்.
ஆனால், நேற்றைய ஆட்டத்தில் இந்தியா கடுமையாக சொதப்பியது. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு இந்தியாவை மூச்சடைக்க வைத்தது என்றே தான் சொல்ல வேண்டும்.
அதோடு இந்திய அணி நிர்ணயித்த 152 ரன்களை பாகிஸ்தான் அணி விக்கெட் ஏதும் எடுக்காமல் அசால்ட்டாக 17 ஓவர்களிலேயே தட்டி சென்றது. பும்ரா, புவனேஷ்வர், ஷமி, ஜடேஜா என அனைவரும் பந்து வீச்சில் கலக்குவார்கள் என்றாலும் பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான், பாபர் அசாம் விக்கெட்டை எடுக்கவே முடியவில்லை.
மேலும், பாகிஸ்தான் அணி தற்போதைய வெற்றியை வெகுவாக கொண்டாட வேண்டாம் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு ஷோயப் அக்தர், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கோலியை பிடிக்கும் ரோகித் சர்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நம்ம ஊர் இன்சமாம் தான் ரோகித் சர்மா என்று கொண்டாடுவதாகவும் கூறினார்.
மேலும், ஹர்பஜன் சிங் வாக் அவுட் செய்யுங்கள் என்று கூறியது குறித்து சொல்லும் போது 'ஹேய் பஜ்ஜி! நாங்க வாக் ஓவர் கொடுக்கணுமா? இல்லையா? என்ன செய்யலாம், கொண்டாடலாம், நாங்க கொண்டாடறோம், பாவம் நீங்க பொறுத்துக்கோங்க' எனக் கலாய்த்துள்ளார்.
இந்தியாவில் எல்லோரும் ஹர்பஜனை செல்லமாக பஜ்ஜி என்று அழைப்பது போல ஷோயப் அக்தரும் நட்பு ரீதியாக ஹர்பஜன் சிங்கை ரிலாக்ஸ் செய்யுமாறு கூறிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
Haanji? Walk over chahiye tha @harbhajan_singh ? pic.twitter.com/6XSc5cpcPp
— Shoaib Akhtar (@shoaib100mph) October 24, 2021
மற்ற செய்திகள்