RRR Others USA

ஷிகர் தவனின் லவ் Proposal-ஐ மறுத்த பெண்.. அண்ணாமலை ஸ்டைலில் தவன் கொடுத்த செம்ம ரிப்ளை..வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷிகர் தவன் தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பெண்ணிற்கு கொடுத்த தரமான பதில் குறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஷிகர் தவனின் லவ் Proposal-ஐ மறுத்த பெண்.. அண்ணாமலை ஸ்டைலில் தவன் கொடுத்த செம்ம ரிப்ளை..வைரல் வீடியோ..!

ஷிகர் தவன்

இந்திய அணியின் ஒப்பனராக களமிறங்கும் ஷிகர் தவன் இதுவரையில் 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 6284 ரன்களையும் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2315 ரன்களையும் குவித்து உள்ளார். 68 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஐபிஎல் தொடரிலும் அதிரடி பேஸ்ட்மேனாக அறியப்படுகிறார்.

ஐபிஎல்-ல் 5875 ரன்களை குவித்துள்ள இவர் 2 சதங்களையும் விளாசியுள்ளார். கடந்த தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிவந்த தவனை பெங்களூரில் நடைபெற்ற ஏலத்தில் தட்டி தூக்கியது பஞ்சாப் அணி.

Shikhar Dhawan reacted when a girl Reject his proposal

அந்த அணிக்காக ஓப்பனிங் செய்துவரும் தவன் தற்போது தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து பேசியிருக்கிறார். பஞ்சாப் அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், தன்னுடைய முந்தைய காதல் குறித்து ஷிகர் தவன் நினைவுகூர்ந்து உள்ளார்.

மறுப்பு

பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் பேசிய தவன், " ஒரு முறை ஒரு பெண்ணிடம் என்னுடைய காதலை வெளிப்படுத்தினேன். ஆனால், அவர் அதனை மறுத்துவிட்டார். அப்போது நீ கோஹினூர் வைரத்தை மறுத்திருக்கிறாய் என அவரிடத்தில் கூறினேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Shikhar Dhawan reacted when a girl Reject his proposal

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் தவன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பஞ்சாப் வீரர் பட்டியலில் உள்ளார். பஞ்சாப் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லியம் லிவிங்ஸ்டன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 3 போட்டிகளில் லியம் 98 ரன்களை எடுத்துள்ள நிலையில் ஷிகர் தவன் 92 ரங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பெண்ணிற்கு தான் கூறிய பதில் குறித்து ஷிகர் தவன் பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

IPL, IPL, SHIKHARDHAWAN, VIRALVIDEO, ஷிகர்தவன், ஐபிஎல், வைரல்வீடியோ

மற்ற செய்திகள்