யாருமே எதிர்பார்க்கல.. ஷிகர் தவானுக்கு BCCI கொடுத்த ஷாக்.. சோகத்தில் ட்வீட் செய்யும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா கிரிக்கெட் அணி 2023 ஆம் ஆண்டு சீசனை இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் தொடங்குகிறது.
Also Read | இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட்ல இடம்பெறாமல் போன நட்சத்திர வீரர்.. முழு விபரம்..!
இருதரப்பு தொடரில் இரு அணிகளும் மூன்று டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறார்கள். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரும் இலங்கை தொடருக்கான இந்திய அணியை டிசம்பர் 27 அன்று அறிவித்தது.
ஒருநாள் அணியில், மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது ஆகியோர் நீக்கப்பட்டனர், அதே நேரத்தில் ராகுல் திரிபாதி மற்றும் ரஜத் படிதார் ஆகியோருக்கும் அணியில் இடமில்லை.
ரிஷப் பந்த் காயம் காரணமாக பரிசீலிக்கப்படவில்லை என்றும், NCA அளிக்கும் அறிக்கையை வைத்து தேர்வுக் குழு அடுத்த தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது குறித்து முடிவெடுக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் கேப்டன் ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் இடமில்லை என்று அறிவித்த பிறகு டிவிட்டரில் ஷிகர் தவானுக்கு நன்றி தெரிவித்தும் அவருடைய பங்களிப்புகளை நினைவு கூர்ந்தும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 37 வயதான ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினம் என ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்
2022 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் செயல்பாடு:
விளையாடிய போட்டிகள்: 22
எடுத்த ரன்கள்: 688
அதிகபட்ச ரன்: 97
ஸ்ட்ரைக்-ரேட்: 74.21
அரை சதம்: 6
இந்திய அணி கேப்டனாக ஷிகர் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.
விளையாடிய போட்டிகள் - 12
வெற்றி பெற்ற போட்டிகள் - 7
தோல்வியடைந்த போட்டிகள் - 3
அதிகபட்ச ஸ்கோர் - 312
குறைந்த ஸ்கோர் - 219
T20 போட்டிகளுக்கான இந்திய அணி
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ் , உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
IND vs SL T20I & ODI தொடர்
இந்தியா vs இலங்கை முதல் டி20: மும்பை ஜனவரி 3ம் தேதி நடைபெறும்.
இந்தியா-இலங்கை 2வது டி20: ஜனவரி 5ம் தேதி புனேயில் நடைபெறும்.
இந்தியா-இலங்கை 3வது டி20: ஜனவரி 7ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 10ம் தேதி கவுகாத்தியில் நடைபெறும்.
இந்தியா - இலங்கை 2வது ஒருநாள் போட்டி: கொல்கத்தாவில் ஜனவரி 12ம் தேதி நடைபெறும்.
இந்தியா - இலங்கை 3வது ஒருநாள் போட்டி: ஜனவரி 15ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | பதவியை புடுங்கிட்டாங்க.. KL ராகுலுக்கு அதிர்ச்சி அளித்த BCCI.. இலங்கை தொடருக்கு புதிய துணைக் கேப்டன்!
மற்ற செய்திகள்