"வெள்ளிக்கிழமை மங்களம் பொங்க".. தமிழ் வசனத்துக்கு Lip Sync செஞ்ச ஷிகர் தவான்.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி, தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.
Also Read | வீடியோ மெசேஜில் கோலி சொன்ன விஷயம்.. சர்ப்ரைஸ் கொடுத்த ஃபெடரர்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, டி 20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் இந்திய அணியை சந்திக்க உள்ளது.
இதில் முதலாவதாக டி 20 தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இதன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது டி 20 போட்டி, அக்டோபர் 02 ஆம் தேதி நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் முடிவடைந்த பின், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. டி 20 போட்டிகளில் தொடர்ந்து களமிறங்காமல் இருந்து வரும் இடதுகை பேட்ஸ்மேன் ஷிகர் தவான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சமீபத்தில் தான் கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவது தொடர்பான வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஷிகர் தவான். இந்நிலையில், தற்போது தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து தமிழ் வசனத்துடன் ஷிகர் தவான் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
பொதுவாக, சமூக வலைத்தளத்தில் அதிகம் வேடிக்கை கலந்த வீடியோக்கள் பகிர்வதை வழக்கமா கொண்டுள்ளவர் ஷிகர் தவான். அப்படி தான் தற்போது ஒரு வீடியோவையும் ஷிகர் தவான் பகிர்ந்துள்ளார்.
தமிழில் பிரபல யூடியூபர்களான கோபி மற்றும் சுதாகர் ஆகியோரின் வீடியோவில் வரும் காட்சி ஒன்றை ஷிகர் தவான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரீல்ஸ் வீடியோக்களாக பதிவு செய்துள்ளனர். ஒரு பக்கம் தமிழ் தெரிந்த சுந்தரும், மறுபக்கம் தமிழ் தெரியாத ஷிகரும் இதற்கு Lip Sync செய்யும் இந்த வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
மேலும், தனது கேப்ஷனில், "தெற்கு பக்கம் நின்று கொண்டிருக்கும் போது, தெற்கில் உள்ள வசனங்கள் தான் பேச வேண்டும்" என ஜாலியாகவும் தவான் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | "விராட் கோலிக்கே அதான் நிலைமை".. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சொன்ன முக்கிய தகவல்!!
மற்ற செய்திகள்