VIDEO: ‘நம்ம தவானா இது..!’.. சஹால் மனைவியுடன் ‘செம’ டான்ஸ் ஆடிய ஷிகர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் மனைவியுடன் தவான் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: ‘நம்ம தவானா இது..!’.. சஹால் மனைவியுடன் ‘செம’ டான்ஸ் ஆடிய ஷிகர்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 98 ரன்கள் அடித்து 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். இதனை அடுத்து நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் அடித்திருந்தார். தனக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை ஒன்றிரண்டு தவிர்த்து மற்றவற்றை ஷிகர் தவான் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார். ஆனாலும் அணியில் இளம்வீரர்களில் வருகை அதிகரித்து வருவதால், தவானுக்கு பல போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை.

Shikhar Dhawan and Dhanashree Verma dance video goes viral

இந்நிலையில் பேட்டி ஒன்றில் தெரிவித்த தவான், தான் எப்போதும் பள்ளத்தில் இருப்பதாகவும், தன்னுடைய வாய்ப்பு கிடைத்தால் அதை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு விளையாடுவது சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாகவும் தவான் கூறினார்.

Shikhar Dhawan and Dhanashree Verma dance video goes viral

மேலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தன்னை சர்வதேச போட்டிகளுக்கு தயாராக வைத்துக் கொள்வதாகவும், அங்கு விளையாடுவது சிறப்பான பயிற்சியாக அமைவதாகவும் தவான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்காக ஷிகர் தவான் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தவான் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் சஹாலின் மனைவி தனஸ்ரீ வர்மாவுடன் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவான் பதிவிட்டுள்ளார்.

Shikhar Dhawan and Dhanashree Verma dance video goes viral

சஹால்-தனஸ்ரீ வர்மாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்