"இனிமே நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் கேப்டன்".. மறைமுகமாக பந்து வீச்சாளர்களை எச்சரிக்கும் ஷிகர் தவான்??.. அதிரடி பேச்சு!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பையை முடித்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
அங்கே டி 20 தொடர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட இந்திய அணி சென்றிருந்தது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்ததால் டி 20 தொடரில் ஹர்திக்
ஹர்திக் பாண்டியாவும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவானும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது போட்டியிடையே மழை குறுக்கிட இதன் பின்னர் DLS முறைப்படி அந்த போட்டி டை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், நவம்பர் 25 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது. இதற்கு முன்பாக சில வீரர்கள் ஓய்வில் இருக்கும் போது இந்திய அணியை தலைமை தாங்கிய அனுபவம் ஷிகர் தவானுக்கு உள்ளது. சீனியர் வீரர் என்பதால் நிச்சயம் ஒரு நாள் தொடரில் அவர் சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில் கேப்டனாக செயல்பட உள்ளது தொடர்பாக ஷிகர் தவான் தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
"கேப்டனாக பொறுப்பேற்கும் போது உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. நீங்கள் உங்கள் அணிக்காக யோசிக்க வேண்டும். எனக்கு கேப்டன் பொறுப்பு அவ்வப்போது கிடைப்பது மகிழ்ச்சியாக தான் உள்ளது. அதேபோல தற்போது அதிக நம்பிக்கையும் வந்துள்ளது. முன்பெல்லாம் ஒரு பவுலர் அதிகமாக ரன் கொடுத்து விட்டால் அவர் என்ன நினைப்பார் என்று அவருக்கான ஓவரை கொடுத்து விடுவேன். ஆனால் இப்போது அந்த தவறை நான் செய்யப் போவது கிடையாது. அதிக ரன்கள் கொடுக்கும் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அவர்கள் அதை தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பதை எல்லாம் இனி நான் யோசிக்கவே போவதில்லை. அணி சிறந்த முறையில் இருக்கும் முடிவை தான் கேப்டன்கள் எடுக்க வேண்டும். இனிவரும் தொடர்களில் கேப்டனாக கடுமையான நான் முடிவை எடுக்க உள்ளேன்.
டி 20, ஒருநாள் கிரிக்கெட் என எந்த போட்டியாக இருந்தாலும் சூழலுக்கு தகுந்தது போல தான் விளையாட வேண்டும். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அங்கு போய் நாம் அதிரடியாக ஆடி ஆட்டமிழப்பதில் எந்த பயனும் கிடையாது. பேட்டிங்கில் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க நான் கடுமையாக உழைத்துள்ளேன்" என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்