“என்னது.. நான் வெளிநாட்டு ப்ளேயரா”.. டிவி ஷோவில் தப்பாக சொன்ன பத்திரிக்கையாளர்.. கூகுள் மேப்பை ஷேர் செஞ்சி KKR வீரர் பதிலடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய வீரரை விளையாட்டு வீரர் என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ம் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அதனால் இந்த இரு அணிகளின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இந்திய அணியின் முதல் தர கிரிக்கெட் வீரர் ஷெல்டன் ஜாக்சன் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஷெல்டன் ஜாக்சனை இந்திய வீரர் எனக் கூறாமல், வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் பத்திரிகையாளர்கள் கூறினர். தொடர்ச்சியாக 3 முறை இதேபோல் கூறிய போதும் அதை நிகழ்ச்சி தொகுப்பாளரும் தடுக்காமல் இருந்துள்ளார்.
This is height of comedy! The so called cricket experts on #SportsTak are continuously calling Sheldon Jackson a foreign player. Shame! pic.twitter.com/aNTPEbh3xX
— راغب रागीब (@dr_raghib) March 22, 2022
இதைப் பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷெல்டன் ஜாக்சன் கூகுள் மேப் போட்டோவை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.
— Sheldon Jackson (@ShelJackson27) March 23, 2022
குஜராத்தை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் (27 வயது), சௌராஷ்டிரா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 79 போட்டிகளில் விளையாடி 5947 ரன்களை குவித்துள்ளார். அதில் 19 சதங்களும், 31 அரைசதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்