"திரும்பவும் இந்தியா 'டீம்'ல சான்ஸ் கிடைக்கல.." 'வேதனை'யை வெளிப்படுத்திய 'சீனியர்' வீரர்.. வலுக்கும் 'ஆதரவு'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக, இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது.

"திரும்பவும் இந்தியா 'டீம்'ல சான்ஸ் கிடைக்கல.." 'வேதனை'யை வெளிப்படுத்திய 'சீனியர்' வீரர்.. வலுக்கும் 'ஆதரவு'!!

ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

இதற்காக, சுமார் மூன்று மாதங்கள் வரை, இந்திய அணி, இங்கிலாந்தில் தங்கியிருக்கும். இதனிடையே, வரும் ஜூலை மாதம், இலங்கை அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டியில், இந்திய அணி ஆடவுள்ளது. இங்கிலாந்து தொடர்களுக்காக தேர்வாகாத வீரர்களைக் கொண்டு, இலங்கை தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ நேற்று அறிவித்திருந்தது. இந்த அணிக்கு, ஷிகர் தவான் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜொலித்த சில இளம் வீரர்களான படிக்கல், நிதிஷ் ராணா, கெய்க்வாட், சேத்தன் சக்காரியா, வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் சர்வதேச அணிக்காக தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், இலங்கை தொடரிலாவது, தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சீனியர் வீரர் ஒருவர், தனது பெயர் இடம்பெறாததால் விரக்தி அடைந்துள்ளார்.

முதல் தர போட்டிகள் மூலம் மிகவும் பிரபலமான ஷெல்டன் ஜாக்சனுக்கு (Sheldon Jackson), தற்போது 34 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளாக, ரஞ்சி தொடர்களில் சிறப்பாக ஆடியிருந்த போதும், அவருக்கு சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை தொடரிலும், இடம் கிடைக்காத நிலையில், இதயம் நொறுங்குவதைப் போல ட்வீட் ஒன்றைச் செய்திருந்தார். இது அதிகம் வைரலான நிலையில், அடுத்த சில மணி நேரத்தில், ஷெல்டன் ஜாக்சன் இந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

 

ஆனாலும், இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது பற்றி, சிலர் ஆதங்கத்துடன் செய்திருந்த ட்வீட்களை, அவர் பகிரவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்