“ஜடேஜாவுக்கு பதிலா அவரை தான் CSK கேப்டனா போட்டிருக்கணும்”.. யாரும் யோசிக்காத வீரரை கைகாட்டிய ரவி சாஸ்திரி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணிக்கு  கேப்டனாக ஜடேஜாவுக்கு பதில் மற்றொரு வீரரை நியமித்திருக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

“ஜடேஜாவுக்கு பதிலா அவரை தான் CSK கேப்டனா போட்டிருக்கணும்”.. யாரும் யோசிக்காத வீரரை கைகாட்டிய ரவி சாஸ்திரி..!

ஏற்கனவே ஒரே வீடியோ கால்-ல 900 பேர வேலையை விட்டு தூக்குன CEO.. இப்போ இப்படி ஒரு ஆர்டரா..அதிர்ந்துபோன ஊழியர்கள்..!

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்த ஆண்டு தோனி விலகினார். இதனை அடுத்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு மோசமான தொடக்கத்தை கொடுத்துள்ளது.

தொடர் தோல்வி

இந்த சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி பெறுவது இதுவே முதல்முறை. இது அந்த அணியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளே ஆஃப்

இனி இதேபோல் அடுத்தடுத்து தோல்வி அடைந்தால், சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினமாகிவிடும் என சொல்லப்படுகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து திணறி வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னையை தோற்கடித்து வெற்றிப்பாதைக்கு திரும்பி விட்டது. ஆனால் பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிஎஸ்கே அணி சொதப்பி வருகிறது.

Shastri names this player should have been CSK captain after Dhoni

ரவி சாஸ்திரி

இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு வீரரை கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘ஜடேஜா போன்ற ஒரு வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என நான் நம்புகிறேன். அவர் ஒரு மேட்ச் வின்னர் மற்றும் நிறைய போட்டிகளில் விளையாடியவர். ஆனால் சென்னை அணி டு பிளசிஸை விட்டு இருக்கக்கூடாது.

தோனி கேப்டனாக தொடர விரும்பவில்லை என்றால், டு பிளசிஸ் கேப்டனாகவும், ஜடேஜா அணியில் ஒரு வீரராகவும் விளையாடியிருக்க வேண்டும். அப்போதுதான் ஜடேஜாவால் சுதந்திரமாக விளையாட முடியும். கேப்டன்சியின் அழுத்தம் இல்லாமல் இருந்திருப்பார்’ என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். முன்னாள் சிஎஸ்கே வீரரான டு பிளசிஸ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. அவுட் ஆகாமலேயே வெளியேறிய அஸ்வின்.. என்ன காரணம்..?

CRICKET, IPL, SHASTRI, CSK, CSK CAPTAIN, DHONI, RAVI SHASTRI, MS DHONI, CHENNAI SUPER KINGS

மற்ற செய்திகள்