"முதல் தடவ ஐபிஎல் மேட்ச்'ல பேட்டிங்.." 6 பந்துகளில் 25 ரன்.. 'World Class' பவுலரையே பொளந்து கட்டிய இளம் வீரர்.. "யாருங்க இவரு?"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே மோதி இருந்த லீக் போட்டியில், ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது. மேலும், நடப்பு தொடரில் குஜராத் அணி தோல்வி அடைந்த ஒரு போட்டியும் இது மட்டும் தான்.
தொடர்ந்து, இன்று நடைபெற்றிருந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் போட்டியிலேயே மரண அடி..
அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய சன்ரைசர்ஸ் அணியில், அபிஷேக் ஷர்மா மற்றும் மார்க்ரம் ஆகியோர், நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 65 ரன்களும், மார்க்ரம் 56 ரன்களும் எடுத்தனர். இதனால், ஹைதராபாத் அணி ஓரளவு நெருக்கடியில் இருந்து மீண்டது. தொடர்ந்து, 180 ரன்கள் வரை ஹைதராபாத் அணி குவிக்கும் என்றும் ரசிகர்கள் கருதினர். ஆனால், கடைசி ஓவரின் போது நடந்த சம்பவம் ஒன்று, ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் வியப்பிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது.
19 ஆவது ஓவர் முடிவில், ஹைதராபாத் அணி 170 ரன்கள் அடித்திருந்தது. தொடர்ந்து, கடைசி ஓவரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லொக்கி பெர்குசன் வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்தை, மார்கோ ஜென்சன் சிக்சருக்கு விரட்டினார். மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுக்க, அடுத்த பந்தை சஷாங்க் சிங் எதிர்கொண்டார்.
கடைசி 3 பந்தும் சிக்ஸர்..
நடப்பு தொடரில் அவர் இதற்கு முன்பு, போட்டிகளில் களமிறங்கி வந்தாலும், பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவருக்கு இன்று தான் கிடைத்தது. கிடைத்த முதல் வாய்ப்பையே ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்கும் அளவுக்கு செய்து விட்டார் சஷாங்க். பெர்குசன் ஓவரில் கடைசி 3 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார்.
முதல் ஐபிஎல் போட்டியில், உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரின் ஓவரில், ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 6 பந்துகள் மட்டுமே சந்தித்த சஷாங்க் சிங், 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்களை எடுத்துள்ளார். இதன் காரணமாக, ஹைதராபாத் அணியும் 6 விக்கெட்டுகளுக்கு 195 ரன்களை எடுத்திருந்தது.
த்ரில் வெற்றி பெற்ற குஜராத்..
சஷாங்க் சிங்கின் பேட்டிங்கை பலரும் பாராட்டி, இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என இருந்த நிலையில், 4 சிக்ஸர்களுடன் மொத்தம் 25 ரன்கள் சேர்த்து, த்ரில் வெற்றி பெற்றிருந்தும் குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்