‘வெறித்தனமான பௌலிங்கால்’... ‘அடுத்தடுத்து விக்கெட் எடுத்ததும்’... ‘ஆக்ரோஷமான பார்வை’... ‘வைரலாகும் இளம் வீரரின் வீடியோ’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய ஒருநாள் போட்டியில், வெறித்தனமான பௌலிங்கால், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாகூரின் ஆக்ரோஷமான வீடியோ வைரலாகி வருகிறது.

‘வெறித்தனமான பௌலிங்கால்’... ‘அடுத்தடுத்து விக்கெட் எடுத்ததும்’... ‘ஆக்ரோஷமான பார்வை’... ‘வைரலாகும் இளம் வீரரின் வீடியோ’...!!!

இந்திய அணி ஆஸ்திரேலியாவில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளைடுகிறது. இதில் ஒருநாள் போட்டியின் 2 போட்டிகளிலும், இந்திய அணியின் பவுலிங் சொதப்பியதால், ஒருநாள் தொடரை இழந்தது.

முக்கியமாக முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வந்தனர். ஆறுதல் வெற்றிபெறலாம் என்ற முனைப்பில், இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சர்வதேச போட்டியில் முதல்முறையாக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் 5.1-வது ஓவரிலேயே மார்னஸ் விக்கெட்டை  வீழ்த்தி அதிர வைத்தார். அதன்பின் ஓவர் போட வந்த ஷர்துல் தாக்கூர் அடுத்தடுத்து அதிரடியாக பவுலிங் செய்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதோடு ரன் செல்வத்தையும் கட்டுப்படுத்தினார்.

கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு தண்ணீர் காட்டி சதம் அடித்த ஸ்மித் விக்கெட்டை எளிதாக தாக்கூர் எடுத்தார். அதன்பின் ஹென்றிக்யூஸ் விக்கெட்டையும் எடுத்தார். முக்கியமாக ஹென்றிக்யூஸ் விக்கெட்டை எடுத்துவிட்டு ஷர்துல் தாக்கூர் கோபமாக முறைத்தார்.  ஆஸ்திரேலிய - இந்திய வீரர்கள் இடையே நல்ல நட்பு இருக்கும் போதும் கூட ஹென்றிக்யூஸ் விக்கெட்டை வீழ்த்திவிட்டு தாக்கூர் ஆக்ரோஷமாக காணப்பட்டார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் இருந்தே ஷர்துல் தாக்கூர் நல்ல பார்மில் இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக இவர் நன்றாக பந்து வீசினார். இருந்தும் இந்திய அணியின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை.  இந்த நிலையில் தற்போது இந்திய அணியில், எனக்கு ஏன் இத்தனை நாட்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது போல மிகவும் கோபமாக வெறித்தனமான பௌலிங்கில் ஈடுபட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவியுள்ளார்.

மற்ற செய்திகள்