"இதை செய் .. விக்கெட் விழும்".. கடைசி ஓவரில் ஷர்துல் தாக்கூருக்கு கோலி கொடுத்த ஐடியா.. 'கிங்'-னு சொல்றது இதுக்குதான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணியுடனான போட்டியில் பரபரப்பான நேரத்தில் பிரேஸ்வெல் விக்கெட்டை வீழ்த்த கோலி தனக்கு ஐடியா கொடுத்ததாக ஷர்துள் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் உள்ளிட்ட தொடர்களை ஆடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையே முதலாவதாக ஒரு நாள் தொடர் சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், 208 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இதன்மூலம் சச்சின், சேவாக், ரோஹித், இஷான் கிஷன் ஆகியோருக்கு பின் ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் ஆரம்பத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. 131 ரன்களில் 6 விக்கெட்டுகளை அந்த அணி இழந்ததால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், ஏழாவது வீரராக களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல், போட்டியின் முடிவை மாற்றி எழுதும் வகையில் ஆடி இருந்தார். அடுத்தடுத்து சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் என அதிரடி காட்டிய மைக்கேல் பிரேஸ்வெல், 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்திருந்தார்.
கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச வந்தார். முதல் பந்திலேயே பிரேஸ்வெல் சிக்ஸர் விளாச போட்டி பரபரப்பானது. ஆனால், அதே ஓவரிலேயே எல்பிடபிள்யூ முறையில் பிரேஸ்வெல் விக்கெட்டை தூக்கினார் தாக்கூர். இந்நிலையில் கடைசி ஓவரில் விராட்கோலி தனக்கு ஐடியா கொடுத்ததாகவும் அதன் பலனாகவே பிரேஸ்வெல் விக்கெட்டை வீழ்த்த முடிந்ததாகவும் கூறியுள்ளார் தாக்கூர்.
இதுபற்றி பேசிய அவர்,"கடைசி ஓவரை நான் வீச முடிவு எடுக்கப்பட்டபோது நான் பதற்றமடைந்தேன். அப்போது விராட் கோலி என்னருகே வந்தார். அவர் ஷார்ட் லெந்தில் பந்தை வீசவேண்டாம் எனவும், யார்க்கரை வீசுமாறும் கூறினார். அதுபோலவே பந்து வீசினேன். அதற்கு பலனும் கிடைத்தது" என தெரிவித்திருக்கிறார்.
Also Read | பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம்.. மேரிலேண்ட் ஆளுநரான முதல் இந்திய பெண்.. யாருப்பா இவங்க?
மற்ற செய்திகள்