‘போடு ரகிட ரகிட’.. டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடப் போகும் இளம் ‘சிஎஸ்கே’ வீரர்.. ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘போடு ரகிட ரகிட’.. டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடப் போகும் இளம் ‘சிஎஸ்கே’ வீரர்.. ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த பிசிசிஐ..!

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை முன்னமே பிசிசிஐ வெளியிட்டது. இதில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகிய இளம் வீரர்கள் இடம்பிடித்தனர்.

Shardul Thakur replaces Axar Patel in Team India T20 World Cup squad

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் 14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி முடிவடைந்ததும், டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய வீரர்கள் ஆயத்தமாவார்கள் என தெரிகிறது.

Shardul Thakur replaces Axar Patel in Team India T20 World Cup squad

இந்த நிலையில் பிசிசிஐ (BCCI) இன்று (13.10.2021) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 உலகக்கோப்பை அணிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் (Axar Patel) காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாகூர் (Shardul Thakur) சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் ஷர்துல் தாகூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அக்சர் படேலுடன் காத்திருப்போர் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார் ஆகிய வீரர்கள் உள்ளனர். மேலும் பயிற்சி ஆட்டக் குழுவில் ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர், கரண் ஷர்மா, ஷாபாஸ் அகமது, கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மற்ற செய்திகள்